ரத்தம் உறையாமை தினம்


ரத்தம் உறையாமை தினம்
x
தினத்தந்தி 18 April 2022 10:58 AM IST (Updated: 18 April 2022 10:58 AM IST)
t-max-icont-min-icon

கனடாவைச் சேர்ந்த பிரென்ச் நேபல் என்பவர் ரத்தம் உறையாமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்.

ம் உடலில் இருக்கும் திரவ உறுப்பு ரத்தம். வெளிப்புற வெப்ப நிலையில் உறைந்துவிடுவது ரத்தத்தின் இயல்பாகும். உடலில் காயம் அல்லது புண் ஏற்படும்போது வெளிவரும் ரத்தம், மூன்று நிமிடங்களுக்குள் உறைய வேண்டும். சிலருக்கு அரை மணி நேரம் கழித்து கூட ரத்தம் உறையாமல் தொடர்ந்து வெளியேறிக்கொண்டு இருக்கும். இதற்கு ‘ரத்தம் உறை யாமை (ஹீமோபிலியா) பாதிப்பு’ என்று பெயர். 

செல்களில் உள்ள எக்ஸ் குரோமோசோம்களில் ஏற்படும் மரபணு மாற்றமே, ரத்தம் உறையாமைக்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கனடாவைச் சேர்ந்த பிரென்ச் நேபல் என்பவர் ரத்தம் உறையாமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். அவரது பிறந்த நாளான ஏப்ரல் 17-ந் தேதி, ‘உலக ரத்த உறையாமை (ஹீமோபிலியா) தினமாக’ அனுசரிக்கப்படுகிறது. இந்த பாதிப்புக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு தொடர்ந்து முயற்சிகளும், ஆய்வுகளும் நடந்து வருகின்றன.

மூக்கில் இருந்து காரணம் இல்லாமல் ரத்தம் கசிவது, தோல் ரத்தச் சிவப்பு நிறமாக மாறுவது, மலத்துடன் ரத்தம் வெளியேறுவது போன்றவை ஹீமோபிலியாவின் அறிகுறிகள். இந்த நோய் மரபு ரீதியாக ஏற்படலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் சத்துக்குறைபாடு இல்லாமல் ஆரோக்கிய மாக இருப்பது ஆகியவையே ரத்தம் உறையாமை பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிகளாகும். 

Next Story