நடனம் எனும் நளினத்தின் நம்பிக்கை!


நடனம் எனும் நளினத்தின் நம்பிக்கை!
x
தினத்தந்தி 25 April 2022 5:30 AM GMT (Updated: 23 April 2022 11:16 AM GMT)

உலக அளவில் நடனக் கலைஞர்களின் சேவையை கவுரவிக்கும் பொருட்டு யுனெஸ்கோ, சர்வதேச நடன கவுன்சிலுடன் இணைந்து, ஏப்ரல் மாதம் 29-ந் தேதி ‘உலக நடன தின’த்தைக் கொண்டாடி வருகிறது.

டனம் என்றதும் நம் சிந்தனையில் காட்சிகளாகத் தெரிவது, நளினம் ததும்பிய நங்கைதான். இந்திய கலாசாரத்தில் நடனத்தில் பெண்களின் பங்கு அதிகம். இன்பம், துன்பம், கோபம், கருணை, ஆச்சரியம் என அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் ஒரே கலை நடனம். பழங்காலம் தொட்டே, மொழியால் வெளிப்படுத்த முடியாத உணர்வைக்கூட நடனத்தால் வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

உலக அளவில் நடனக் கலைஞர்களின் சேவையை கவுரவிக்கும் பொருட்டு யுனெஸ்கோ, சர்வதேச நடன கவுன்சிலுடன் இணைந்து, ஏப்ரல் மாதம் 29-ந் தேதி ‘உலக நடன தின’த்தைக் கொண்டாடி வருகிறது.

பொதுமக்களிடையே நடனத்தின் முக்கியத்துவம், நடனத்தால் கிடைக்கும் உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அனைத்து நாடுகளும் அவர்களின் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனத்தின் முக்கியத்துவத்தை உணர்வதும், முறையான நடனக் கல்வியை ஆரம்பப் பள்ளியில் இருந்து வழங்குவதற்கு வழிவகை செய்வதும் இந்த நாளின் நோக்கமாகும்.

பெண்கள் நடனக் கலையைக் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், அவர்களின் மனபலத்தை உறுதியாக்குவதில் நடனத்துக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. தன்னம்பிக்கை, உணர்ச்சியைக் கையாளும் திறன், விடாமுயற்சி மற்றும் வாழ்வியலுக்குத் தேவையான பல குணங்களை இயல்பாகவே உண்டாக்க நடனம் வழிவகுக்கும். 

Next Story