சர்வதேச குடும்ப தினம்
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 15-ந் தேதி ‘சர்வதேச குடும்ப தினம்' கொண்டாடப்படுகிறது.
குடும்பம் என்பது சமூக கட்டமைப்பின் அடிப்படை ஆகும். தனிநபரின் வளர்ச்சிக்கு குடும்பமே அத்தியாவசியமான, பாதுகாப்பான சூழலை உருவாக்கும். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, உணர்ச்சிகளின் மாற்றம் நிறைந்த நிலையிலும், வாழ்நாள் முழுவதும் நிரந்தரமான ஆதரவான நிலையை குடும்பம் ஏற்படுத்தும்.
சமூகத்தின் முக்கிய அங்கமாக இருப்பது ‘குடும்ப அமைப்பு’ என்பதை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 15-ந் தேதி ‘சர்வதேச குடும்ப தினம்' கொண்டாடப்படுகிறது.
1993-ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை ‘சர்வதேச குடும்ப தினம்’ தீர்மானத்தை நிறைவேற்றியது. உலகில் உள்ள குடும்பங்களின் சிறந்த வாழ்க்கைத் தரத்தையும், சமூக முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதற்கும் மாறிவரும் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்புகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு தனி மனிதனின் மனபலமே, மொத்தக் குடும்பத்தையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் அச்சாணி. அதுவே குடும்பத்தின் பலம். வளமான குடும்பமே சமூகத்தின் ஆதாரம். நண்பர்கள், உறவினர்கள் இருந்தாலும், இன்பத்திலும், துன்பத்திலும் உடன் இருப்பது குடும்பம்தான்.
Related Tags :
Next Story