உலக முட்டை தினம்
பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் முட்டை உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதிக புரத சத்து உள்ள உணவுகளின் பட்டியலில், முக்கியமான இடம் வகிப்பது கோழி முட்டை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. தினம் ஒரு முட்டை சாப்பிடுவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் 1996-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாவது வெள்ளிக்கிழமை (அக்டோபர் 8) ‘உலக முட்டை தினம்’ கொண்டாடப்படுகிறது. முட்டையின் நன்மைகள், சத்துக்கள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.
மிகக் குறைந்த விலையில் கிடைக்கும், அதிக புரதச் சத்து கொண்ட உணவாக முட்டை இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் முட்டை உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மூளை மற்றும் தசை வளர்ச்சி, நினைவாற்றல், நோய் எதிர்ப்பு சக்தி, பார்வைத்திறன் மேம்படுதல் போன்ற வற்றுக்கு முட்டை உலக அளவில் ‘சிறந்த உணவு’ என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.முட்டையில் ஏ, ஈ, பி 12, பி 5, போன்ற வைட்டமின்களும், கோலைன், அமினோ
அமிலம், ஒமேகா-3 கொழுப்பு அமிலம், புரதச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டையாவது சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
Related Tags :
Next Story