வகைவகையான சுண்டல்கள்


வகைவகையான சுண்டல்கள்
x
தினத்தந்தி 11 Oct 2021 4:15 PM IST (Updated: 11 Oct 2021 4:15 PM IST)
t-max-icont-min-icon

சுண்டல்கள் பற்றிய சுவையான தகவல்கள்

ஸ்வீட் கார்ன் சுண்டல்

* தேவையான பொருட்கள்

ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - 1 கப்
துருவிய தேங்காய் - ½ கப்
பச்சை மிளகாய் - 3 
(நீளவாக்கில் நறுக்கியது)
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு 
(பொடிதாக நறுக்கியது) 
கடுகு - ½ டீஸ்பூன்
உளுந்து - ½ டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ¼ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
துருவிய கேரட் - ½ கப்

செய்முறை
 ஸ்வீட் கார்ன் முத்துக்களை குக்கரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து, 
2 அல்லது 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்  வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் உளுந்து போட்டு தாளிக்கவும்  பின்பு அதில் பெருங்காயத்தூள் சேர்க்கவும். பிறகு பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்  பின்னர் அதில் கேரட்டை சேர்த்து நன்றாக கலக்கவும். கடைசியாக வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துக் களையும் சேர்த்துக் கிளறவும். இறக்கும்போது துருவிய தேங்காய் மற்றும் எலுமிச்சை சாறு விட்டு கலக்கவும்  சூடான ஸ்வீட் கார்ன் சுண்டல் தயார்.

ஜவ்வரிசி சுண்டல்

தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி - 2 கப்
பயத்தம் பருப்பு - 1 கப்
பச்சை மிளகாய் - 3 
(நீளவாக்கில் நறுக்கியது)
துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன்
துருவிய கேரட் - ½ கப்
நெய் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - ¼ கப்

செய்முறை
 ஜவ்வரிசியை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு தண்ணீரை வடித்துக் கொள்ளவும்  பயத்தம் பருப்பை சிறிதளவு உப்பு கலந்து, குழையாமல் வேக வைத்து, வடிகட்டி வைக்கவும்.

 வாணலியில் நெய்யை ஊற்றி சூடான தும், இஞ்சி, பச்சை மிளகாய், ஊற வைத்த ஜவ்வரிசி, வேகவைத்த பயத்தம் பருப்பு மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்  பின்பு அதில் துருவிய கேரட், துருவிய தேங்காய், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறவும்  ஜவ்
வரிசி சுண்டல் தயார்.

கொழுக்கட்டை சுண்டல்

தேவையான பொருட்கள்
அரிசி மாவு  - 1 கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - ½ டீஸ்பூன்
உளுந்து - ½ டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை
 வாணலியில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்  அதில் ஒரு சிட்டிகை உப்பு, நல்லெண்ணெய் சேர்த்துக் கலக்கவும் தண்ணீர் நன்றாக கொதிக்கும்போது, அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து, கட்டியில்லாமல் நன்றாக கலக்கவும். 

மாவு நன்றாக வெந்தவுடன் மூடி போட்டு மூடவும்  சிறிது நேரம் கழித்து மாவு ஆறிய பின்பு, கோலிக்குண்டு அளவு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்  இந்த உருண்டைகளை ஆவியில் வேகவைத்து எடுக்கவும்  வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும்.

 பின்பு அதில் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும். கடைசியாக வேகவைத்த உருண்டைகளைப் போட்டு, நன்றாக கிளறி இறக்கவும்  சூடான கொழுக்கட்டை சுண்டல் தயார். 

Next Story