உணவு

புளியின் மருத்துவ குணங்கள் + "||" + tamarind and medical benefits

புளியின் மருத்துவ குணங்கள்

புளியின் மருத்துவ குணங்கள்
உப்பு மற்றும் புளியை சம அளவு எடுத்து அரைத்து, உள்நாக்கில் தடவி வந்தால் உள்நாக்கில் சதை வளர்வது தடைப்படும்.
றுசுவைகளில் ஒன்றான ‘புளிப்பு’ சுவை நிறைந்தது புளி. சமையல் அறையில் தவறாது இடம் பிடிக்கும் பொருட்களின் பட்டியலில் இதுவும் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் புளி, புற்றுநோய் செல்களைத் தடுக்கும். வலி, வீக்கத்தைக் குறைக்கும் என பல மருத்துவக்குணங்களைக் கொண்டது.  

புளிய மரத்தின் இலை வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைக்கும். தளிர் இலை உடல் வெப்பத்தை அதிகரிக்கும். புளியம் பூ குளிர்ச்சி தரும். புளியங்காய் பித்தம் தணிக்கும். புளியம் பழம் குடல் வாயு அகற்றும், குளிர்ச்சி தரும், மலமிளக்கியாக செயல்படும். புளிய மரப்பட்டை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். தாது பலம் தரும். புளியங்கொட்டை சிறுநீர் பெருக்கும்.

* இதன் தளிர் இலைகளைத் துவையல் தயார் செய்து சாப்பிட்டால் பித்தம் சமனாகி, வயிற்று மந்தம் நீங்கும்.

* ஆமணக்கு நெய் தடவி, புளிய இலையை ஒட்டவைத்து இரண்டு மணி நேரம் கழித்து சூடான நீரைக் கொண்டு மென்மையாக மசாஜ் செய்யும்போது, கை, கால் வீக்கம், மூட்டுவலி, கை, கால், தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதியில் உள்ள சுளுக்கு நீங்கும்.

* 30 மில்லி புளிய இலைச்சாற்றை காய்ச்சிக் கொதிக்க வைத்து, பால் கலந்து சாப்பிட்டால் ரத்தபேதி, சீதபேதி நிற்கும்.

* புளியம் பூவை அரைத்து கண்ணைச் சுற்றிப் பற்று போட்டால் கண்வலி, கண் சிவப்பு குறையும்.

* புளியம் பழம் மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணியைச் சம அளவு எடுத்து அரைத்து, இரண்டு நெல்லிக்காய் அளவு உருண்டையாக்கி காலை-மாலை என 12 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ‘கருப்பை இறக்கம்’ குணமாகும்.

* உப்பு மற்றும் புளியை சம அளவு எடுத்து அரைத்து, உள்நாக்கில் தடவி வந்தால் உள்நாக்கில் சதை வளர்வது தடைப்படும்.

* புளியங்கொட்டையின் தோல், மாதுளம் பழத்தோல் இரண்டையும் சம அளவு கலந்து, சூரணம் செய்து சுண்டக்காய் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பேதி, வாந்தி, வாயு பொருமல் தீரும்.

* புளியங்கொட்டைத் தோல், கருவேலம்பட்டைத் தூள் சம அளவு கலந்து உப்புப் பொடியுடன் சேர்த்து பல் தேய்த்து வந்தால் பல் கூச்சம், பல் ஆடுதல், சீழ் வடிதல், ரத்தக்கசிவு, ஈறு வீக்கம் ஆகியவை சரியாகும்.

* புளியம் பட்டைத் தூளும், உப்பும் கலந்து வெண்ணிறமாகும் வரை வறுத்து அரைத்த பொடியை, 100 மில்லி கிராம் எடுத்து சீரகத் தண்ணீரில் கலந்து காலை, மாலை குடித்து வந்தால் செரிமானக் கோளாறு, வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகியவை குணமாகும்.


தொடர்புடைய செய்திகள்

1. மலைவாழ் மக்களிடையே மாற்றம் ஏற்படுத்திய மகாலட்சுமி
கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகள் நடந்தன. ஆனால், ஸ்மார்ட்போன் வாங்கும் வசதி இல்லாத காரணத்தால் பழங்குடி மாணவர்களின் கல்வியில் தேக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மீண்டும் கல்வியின் மீது கசப்பு வந்துவிடக் கூடாது என எண்ணினேன். எனவே, மீண்டும் மாணவர்களைத் தேடி அவர்களின் வீடுகளுக்கே சென்று பாடங்களை எடுக்கத் தொடங்கினேன்.
2. அழகுக்கு அழகு சேர்க்கும் ‘லைட்-வெயிட்’ மேக்கப்!
முகத்துக்கு அழகு சேர்ப்பவை கண்கள். அவற்றை அழகுபடுத்துவதன் மூலம் மேக்கப் முழுமை பெறும். ஐ ஷேடோ, ஐ லைனர், மஸ்காரா போன்ற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி கண்களின் அழகை அதிகரிக்கலாம்.
3. பேஷன் உலகில் கலக்கும் சந்தியா
சிறு வயதில் என் பள்ளி சார்பாக நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிக்காக தேர்ந்து எடுக்கப்பட்டேன். அதில் இருந்தே எனக்கு அழகாக ஆடை அணிவது மிகவும் பிடிக்கும். அதுவே நான் ஆடை வடிவமைப்பாளர் துறையை தேர்வு செய்ததற்கு எனக்கு தூண்டுதலாக இருந்தது.
4. உலக நீரிழிவு நோய் தினம்
நீரிழிவு நோயால் அதிகரித்து வரும் உடல் நல பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உலக நீரிழிவு நோய் கூட்டமைப்பும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து ‘உலக நீரிழிவு நோய் தின’த்தை அறிவித்தது. 1991-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ந் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
5. அடம்பிடிக்கும் குழந்தைகளை அசத்தும் ‘உணவு ஓவியம்’
உணவு ஓவியங்கள் வடிவமைப்பதற்கு பொறுமையும், ஆர்வமும் தேவை. ஒரு ஓவியத்தை வடிவமைப்பதற்கு ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் ஆகலாம். எனக்கு இது சிரமமாகத் தெரியவில்லை, சந்தோஷமாக இந்த நேரத்தைச் செலவிடுகிறேன்