வெஜ் கீமா


வெஜ் கீமா
x
தினத்தந்தி 8 Nov 2021 5:30 AM GMT (Updated: 6 Nov 2021 10:19 AM GMT)

எளிய முறையில் வெஜ் கீமா செய்வது பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்....

‘கீமா’ என்றதும் பலருக்கு நினைவில் வருவது அசைவம் மட்டும் தான். அதனை மறக்கடிக்கும் விதமாக சைவப் பிரியர்கள் மட்டுமின்றி, அசைவப் பிரியர்களும்  விரும்பும் சுவையான உணவு தான் வெஜ் கீமா. அதன் எளிய செய்முறை இங்கே...

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 4 (பொடிதாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடிதாக நறுக்கியது)
தக்காளி - 2 (அரைத்தது)
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
குடைமிளகாய் - 1
கேரட் - 1
பீன்ஸ் - 50 கிராம்
ஊறவைத்த பச்சைப் பட்டாணி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 1
கறி மசாலாப் பொடி - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ½ தேக்கரண்டி
தனியா தூள் - ½ தேக்கரண்டி
சீரகத் தூள் - ½ தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
துருவிய பன்னீர் - 100 கிராம்
துருவிய வெண்ணெய் - 2 தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு - ½ தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய் மற்றும் குடை மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். 

அடுப்பில், அடி கனமான வாணலியை வைத்து அதில் நெய் ஊற்றவும். வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது, குடை மிளகாய், பட்டாணி, பச்சை மிளகாய், அரைத்த தக்காளி விழுது மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

2 நிமிடங்கள் கழித்து மிளகாய்த் தூள், சீரகத்தூள், கறி மசாலாத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும். பின்பு சிறிது தண்ணீர் ஊற்றிக் கலந்து கேரட், பீன்ஸ், துருவிய பன்னீர் சேர்த்து வதக்கவும். 2 நிமிடங்களுக்குப் பிறகு சிறிதளவு  துருவிய வெண்ணெய்யை அதில் சேர்க்கவும். 

இந்தக் கலவையை நன்றாகக் கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். பின்பு 15 முதல் 20 நிமிடங்கள் வரை மூடி வேக வைக்கவும். வெந்ததும் மீதம் இருந்த துருவிய வெண்ணெய்யை மேலே தூவி எலுமிச்சம் பழச்சாறை ஊற்றவும்.

கடைசியாக கொத்தமல்லி தழையை மேலே தூவி இறக்கவும். சுவையான வெஜ் கீமா தயார். இதனை சப்பாத்தி, தோசை, அடையுடன் சேர்த்துப் பரி மாறலாம். 

Next Story