பன்னீர் பாப்கார்ன்
சிறுவர்களுக்கு பிடித்தமான பன்னீர் பாப்கார்னை எளிமையான முறையில் செய்வதற்கு உதவும் ரெசிபி இது.
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 100 கிராம்
மைதா/ கடலைமாவு/ அரிசிமாவு - ¼ கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 ½ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த் தூள் - ¾ தேக்கரண்டி
கரம் மசாலா - ¾ தேக்கரண்டி
மிளகு தூள் - ½ தேக்கரண்டி
ரொட்டித் தூள் - ½ கப்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
பன்னீரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ரொட்டித் தூள், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா அல்லது நீங்கள் விரும்பிய மாவைக் கொட்டி, அதில் மிளகாய்த் தூள், உப்பு, மிளகு தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்பு அதில் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாக கலக்கவும். அந்தக் கலவையில் வெட்டி வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து கிளறவும். பன்னீரில் மசாலா நன்றாக ஒட்டி இருக்க வேண்டும். பிறகு பன்னீரை ரொட்டித்தூளில் போட்டு பிரட்டவும்.
இதை 15 நிமிடங்கள் குளிர்பதனப் பெட்டியில் வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் பன்னீரைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்.
Related Tags :
Next Story