சீஸ் ஸ்டிக்ஸ்


சீஸ் ஸ்டிக்ஸ்
x
தினத்தந்தி 24 Jan 2022 11:00 AM IST (Updated: 22 Jan 2022 5:11 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ‘சீஸ் ஸ்டிக்ஸ்' தயாரிக்கும் முறை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
சீஸ் துண்டுகள் - 5
சோளமாவு - 4 தேக்கரண்டி
மைதா - 4 தேக்கரண்டி
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
ரொட்டித்தூள் - ஒரு கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மைதா மாவு, சமையல் சோடா, மிளகாய்த் தூள், இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி ரொட்டித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். 

அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இப்போது அந்தக் கலவையில் சீஸை சேர்த்து பிசைந்து, ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே வைத்துவிடவும். 

பிறகு அந்தக் கலவையை நீளமான துண்டுகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். அதை ரொட்டித்தூளில் நன்றாகப் பிரட்டி எடுத்துக் கொள்ளவும். 



ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், அதில் நீளமாக உருட்டி வைத்த துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுங்கள். 

இப்போது சீஸ் ஸ்டிக்ஸ் தயார். அதை சூடாக பரிமாறவும்.

Next Story