கொரிய உணவு “கிம்சி”


கொரிய உணவு “கிம்சி”
x
தினத்தந்தி 31 Jan 2022 11:00 AM IST (Updated: 29 Jan 2022 5:24 PM IST)
t-max-icont-min-icon

கொரிய நாட்டின் பாரம்பரிய உணவின் அங்கமாக இருப்பது எண்ணெய் சேர்க்காத காய்கறிகள் மற்றும் மசாலாக் கலவை. காய்கறிகளுடன் மசாலாப் பொருட்களைச் சேர்த்து, பதப்படுத்தி தயாரிக்கும் உணவுக்கு ‘கிம்சி' என்று பெயர்.

ந்திய உணவின் சுவை கூட்டியான ஊறுகாயைப் போன்று, கொரிய நாட்டின் பாரம்பரிய உணவின் அங்கமாக இருப்பது எண்ணெய் சேர்க்காத காய்கறிகள் மற்றும் மசாலாக் கலவை. காய்கறிகளுடன் மசாலாப் பொருட்களைச் சேர்த்து, பதப்படுத்தி தயாரிக்கும் உணவுக்கு ‘கிம்சி' என்று பெயர். இது கொரிய நாட்டின் பிரதான குளிர்கால உணவாகக் கருதப்படுகிறது. இதன் செய்முறையை பார்ப்போமா?

தேவையான பொருட்கள்
முட்டை கோஸ் - 1
முள்ளங்கி - 2
கேரட் - 2
வெங்காயம் - 1 பெரியது
வெங்காயத் தாள் - 1 கைப்பிடி அளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - ½ டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 ½ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
நீள வாக்கில் நறுக்கிய முட்டை கோஸை தண்ணீரில் நன்றாக சுத்தப்படுத்தி, உப்பு சேர்த்து கிளறவும். 

இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு மீண்டும் முட்டை கோஸை இரண்டு முறை தண்ணீரில் நன்றாகக் கழுவி உலர்த்தவும்.

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அதில் அரிசி மாவு சேர்த்து அது கெட்டியாகாதபடி கிளறவும். அத்துடன் சர்க்கரை மற்றும் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து, அடிப்பிடிக்காதவாறு கிளறவும். அதில் சர்க்கரை கரைந்ததும் அடுப்பை அணைத்து கலவையை ஆற விடவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், ஆற வைத்த அரிசி மாவு கலவையை சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்பு பொடிதாக நறுக்கிய வெங்காயத் தாள், தோல்நீக்கி நீளவாக்கில் வெட்டிய முள்ளங்கி மற்றும் கேரட்டை ஒன்றாகக் கலந்து, தண்ணீரில் நன்றாகக் கழுவவும். பின்பு தண்ணீரை முழுவதுமாக வடியச் செய்து காய்கறிகளை மாவுக் கலவையில் சேர்க்க வேண்டும்.

பிறகு அதில் முட்டைகோஸ் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

இந்தக் கலவையை காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு இரண்டு நாட்கள் வரை பிரிட்ஜிலோ அல்லது சூரிய ஒளி படாத இடத்திலோ வைக்க வேண்டும். நன்கு பதமானவுடன் இதை ஊறுகாய் போன்று சாதத்துடன் சாப்பிடலாம்.

பலன்கள்
‘கிம்சி’ உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் உள்ள புரோ பயாட்டிக்ஸ் சரும ஆரோக்கியத்துக்கு உதவும். 

Next Story