ரசகுல்லா புட்டிங்
ரசகுல்லா புட்டிங் மற்றும் முட்டைகோஸ் அல்வா செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்....!
ரசகுல்லா புட்டிங்
தேவையான பொருட்கள்
ரசகுல்லா - 10
ரசகுல்லா சிரப் - 4 டேபிள் ஸ்பூன்
பால் - ½ லிட்டர்
கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
ரோஜா பன்னீர் - 1 டீஸ்பூன்
நறுக்கிய பிஸ்தா பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
நான்-ஸ்டிக் பாத்திரத்தில் பாதியளவு பாலை ஊற்றவும். பால் சிறிது குறையும் வரை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் கஸ்டர்ட் பவுடரை போட்டு, எடுத்துவைத்திருந்த பாதி அளவு காய்ச்சாத பாலை ஊற்றி, கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
இந்தக் கலவையைக் கொதிக்க வைத்த பாலில் ஊற்றி, ரசகுல்லா சிரப் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
கட்டிகள் உருவாகாமல் இருக்க தொடர்ந்து கிளறி, மீண்டும் குறைவான தீயில் அடுப்பில் வைத்துக் கிளறவும்.
ரசகுல்லாவை மென்மையாகப் பிழிந்து பாதியாக நறுக்கி தனியாக வைக்கவும்.
அடுப்பில் இருக்கும் கலவை கெட்டியானதும், அதில் நறுக்கிய ரசகுல்லா மற்றும் ரோஜா பன்னீரை சேர்க்கவும். மெதுவாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும்
இதை 2 மணி நேரம் குளிரூட்டவும். பரிமாறும்போது நறுக்கிய பிஸ்தா கொண்டு அலங்கரிக்கவும். குளிரவைத்து பரிமாறவும்!
முட்டைகோஸ் அல்வா
தேவையான பொருட்கள்
முட்டைகோஸ் - ½ கப்
நெய் - ¼ கப்
கொழுப்பு நீக்காத பால் – 2 கப்
சர்க்கரை - ½ கப்
ஏலக்காய் பொடி - ½ டீஸ்பூன்
நறுக்கிய பாதாம் மற்றும் முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றவும். அது உருகியதும் பொடியாக நறுக்கிய முட்டைகோஸை போட்டு நன்றாக வதக்கவும். பின்பு அதில் பாலை ஊற்றி வேக வைக்கவும்.
பால் பாதி அளவு சுண்டியதும், அதில் சர்க்கரை, நெய் சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டியாகும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும். கடைசியாக ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
தொடர்ந்து கிளறிக்கொண்டே இருந்து, அல்வா பதம் வந்ததும் நறுக்கிய பாதாம் மற்றும் முந்திரி தூவி இறக்கவும்.
Related Tags :
Next Story