புதுமையான ரெசிபி
புதுமையான ரெசிபிகளை செய்து பாருங்கள்
உடலை ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் வைத்திருக்க செய்வதில் இளநீருக்கு முக்கிய இடம் உண்டு. இளநீரில் நார்ச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், செம்பு, செலினியம். பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது கோடைகாலத்தில் உண்டாகும் வியர்க்குரு, பருக்கள் போன்ற சரும நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் பெற்றது. சிறுநீரக கல் உருவாகுவதையும் தடுக்கிறது. இளநீர் கொண்டு செய்யக்கூடிய இரண்டு சுலபமான பானங்களை இந்தத் தொகுப்பில் காணலாம்.
இளநீர் ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்
இளநீர் - 2 கப்
இளந்தேங்காய் - 1 கப்
வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கப்
பால் - ½ கப்
ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு
வாழைப்பழம் -1
செய்முறை
இளந்தேங்காய் மற்றும் இளநீர் இரண்டையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
பின்பு அதில் வாழைப்பழம் மற்றும் பால் சேர்த்து அரைத்துத் தனியாக வைத்துக்கொள்ளவும்.
வெண்ணிலா ஐஸ்கிரீம் மற்றும் ஜஸ்கட்டிகள் இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து, இளநீர்க் கலவையுடன் கலந்து சில்லெனப் பரிமாறவும்.
இளநீர் மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்
இளநீர் - 2 கப்
இளந்தேங்காய் - 1 கப்
பிரீஸரில் உறைய வைக்கப்பட்ட காய்ச்சிய பால் - 1 கப்
காய்ச்சி குளிரூட்டப்பட்ட பால் - ½ கப்
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
செய்முறை
மிக்ஸியில் இளநீர், இளந்தேங்காய், சர்க்கரை மற்றும் காய்ச்சி உறைய வைக்கப்பட்ட பால், ஐஸ்கட்டிகள் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் அதனுடன் காய்ச்சிக் குளிரூட்டப்பட்ட பால், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். இப்போது சுவையான மற்றும் சில்லென்ற ‘இளநீர் மில்க் ஷேக்’ தயார்..
Related Tags :
Next Story