உடல் எடையைக் குறைக்க உதவும் கோடைக்கால காய்கறிகள்


உடல் எடையைக் குறைக்க உதவும் கோடைக்கால காய்கறிகள்
x
தினத்தந்தி 25 April 2022 5:30 AM (Updated: 23 April 2022 12:09 PM)
t-max-icont-min-icon

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவும் பாகற்காய், கெட்ட கொழுப்புகளையும் நீக்கும். இதில் கலோரிகள் குறைவாக உள்ளதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.

கோடைக்காலத்தில் கலோரிகள் குறைவாக உள்ள காய்கறிகள் அதிகமாகக் கிடைக்கின்றன. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கோடைக்காலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தினமும் அன்றாட உணவில் இந்தக் காய்கறிகளைச் சேர்த்துக்கொண்டால் உடல் எடையை எளிதாகக் குறைக்க முடியும். அந்தக் காய்கறிகளின் தொகுப்பு இங்கே:

வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காய் கோடைக் காலத்தில் மலிவாக கிடைக்ககூடிய ஒன்று. நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால், இதனைக் கோடையில் அதிகம் சாப்பிட்டால் உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். இது கொழுப்புகளைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவும்.

சுரைக்காய்:
சுரைக்காயில் 96 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், குறைந்த அளவு கலோரி, அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. வைட்டமின், கால்சியம், 
மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. சுரைக்காய் சாறு உடலுக்கு சத்துக்களைத் தருவதோடு, கொழுப்பைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ், கொலஸ்ட்ரால் பிரச்சினையைத் தடுத்து, கல்லீரலைச் சுத்தம் செய்யும். இதில் கலோரிகள் குறைவாக உள்ளதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினந்தோறும் முட்டைக்கோஸ் சாறு குடிக்கலாம் அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம்.  இதில் உள்ள குளுக்கோசினோலேட்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

பாகற்காய்
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவும் பாகற்காய், கெட்ட கொழுப்புகளையும் நீக்கும். இதில் கலோரிகள் குறைவாக உள்ளதால் உடல் எடையைக் குறைக்க உதவும். 
இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து, ஜீரண சக்தியை அதிகரித்து உணவில் இருக்கும் சத்துகளைப்  பிரித்துக் கொடுக்கும். கொழுப்பை வெளியேற்றும். எனவே உடல் எடையைக் குறைக்க விரும்பு வோர் தினமும் பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது காலையில் எழுந்தவுடன் பாகற்காய் சாறு அருந்தலாம்.

பிரோக்கோலி
இது உலகின் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். எடை இழப்புக்கு சிறந்த உணவாக அமைகிறது. இதில் 89 சதவீதம் நீர்ச்சத்து இருக்கிறது. எனவே உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள், போதுமான நீரேற்றம், நார்ச்சத்துக்களைப் பெற பிரோக்கோலியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கேரட்
உடல் எடை குறைப்பதில் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறைந்த கலோரிகளைக் கொண் டது. அதிக அளவு நார்ச்சத்துகள் உள்ளன. இவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்க உதவும். கேரட்டை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம். 

பீன்ஸ்
இதில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், எளிதில் உடல் எடையைக் குறைக்க உதவும். 

குடைமிளகாய் 
குடைமிளகாயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் உடல் எடையைக் குறைக்க வழிசெய்வதுடன், உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள  உதவுகிறது. 
1 More update

Next Story