மழைக்கால அழகுக் குறிப்புகள்


மழைக்கால அழகுக் குறிப்புகள்
x
தினத்தந்தி 25 Oct 2021 4:30 AM GMT (Updated: 2021-10-23T15:44:33+05:30)

மழைக்காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.

ழைக்காலங்களில் சருமம், பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்படும். இதன் மூலம் தேமல், அரிப்பு, முகப்பரு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இவற்றைத் தவிர்ப்பதற்கு சருமத்தைத் தூய்மையாக பராமரிப்பது அவசியம். 

தினமும் இரண்டு அல்லது மூன்று முறை தூய்மையான நீரில் முகம் கழுவுவது நல்லது. சருமத்தில் உள்ள இறந்த செல்கள் சருமத்துளைகளை அடைக்காமல் இருப்பதற்கும் மழைக்காலங்களில் சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி செய்யக்கூடிய 5 எளிமையான ‘பேஷியல்'களை காண்போம்.

* முகம் பொலிவு பெறுவதற்கு...

சந்தனத் தூள் - 1 தேக்கரண்டி, ரோஜா 
பன்னீர் - 2 தேக்கரண்டி, 
கஸ்தூரி மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி போன்றவற்றை எடுத்துக்கொண்டு நன்றாகக் கலக்கவும். 
இதை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவவும்.

* ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு...

ஓட்ஸ் - 2 தேக்கரண்டி, 
ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, 
தேன்- 1 தேக்கரண்டி, 
தயிர் - 2 தேக்கரண்டி இவை அனைத்தையும் நன்றாகக் கலந்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். 
பின்பு முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

* சிவப்பழகு பெறுவதற்கு...

வெட்டி வேர் (அரைத்தது) - 1 தேக்கரண்டி, 
சிவப்பு சந்தனத்தூள் - 1 தேக்கரண்டி, 
கஸ்தூரி மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி, 
குங்குமப்பூ - ¼ டீஸ்பூன் எடுத்துக்கொண்டு, இவற்றுடன் தேவையான அளவு பால் சேர்த்து பசை போல கலந்து கொள்ளவும். 
இதை 10 நிமிடங்கள் ஊறவைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் மென்மையாக தடவி மசாஜ் செய்யவும். 
30 நிமிடங்கள் கழித்த பின்பு, குளிர்ந்த தண்ணீரில் முகத்தைக் கழுவவும்.

* மிருதுவான சருமத்திற்கு...

ஸ்ட்ராபெர்ரி பழம் - 2 (அரைத்தது), 
முல்தானிமெட்டி - 2 தேக்கரண்டி, 
ரோஜா பன்னீர் - 3 தேக்கரண்டி எடுத்துக்கொண்டு மூன்றையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். 
15 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

* அரிப்பு, தேமல் நீங்கி முகம் பளபளப்பு பெறுவதற்கு..

தேன் - 1 தேக்கரண்டி, 
சர்க்கரை - 1 தேக்கரண்டி, 
கற்றாழை ஜெல் - 1 தேக்கரண்டி 
மூன்றையும் நன்றாகக் கலந்து, முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்கள் நீங்கும் வரை மென்மையாக தடவி மசாஜ் செய்யவும். 
பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும். 

பிறகு, கடலை மாவு - 1 தேக்கரண்டி, 
கஸ்தூரி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, 
பால் - 3 தேக்கரண்டி, 
தேன் - 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாகக் கலந்து முகம் முழுவதும் தடவவும். 
30 நிமிடங்களுக்குப் பின்பு, குளிர்ந்த நீரில் கழுவவும்.
பின்னர் பாதாம் எண்ணெய்க் கொண்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்யவும். இதன் மூலம் முகம் அழகு பெறும்.


Next Story