இனிமையான தூக்கத்திற்கு... எளிமையான வழிகள்...


இனிமையான தூக்கத்திற்கு... எளிமையான வழிகள்...
x
தினத்தந்தி 25 Oct 2021 4:30 AM GMT (Updated: 23 Oct 2021 12:04 PM GMT)

ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவதற்கு தியானம் செய்வது எளிய வழியாகும். இரவில் படுக்கும் முன்பு தியானத்தில் ஈடுபடுவதன் மூலம், மனதில் உள்ள குழப்பங்கள் மற்றும் அழுத்தங்கள் நீங்கி, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.

ரோக்கியமாக வாழ்வதற்கு தூக்கம் அவசியமானது. போதிய தூக்கம் இல்லையென்றால் உடலில் பல நோய்கள் உண்டாகும். தூங்குவதன் மூலம் உடலுக்கு ஓய்வு கிடைக்கும். இதனால் உடல் உறுப்புக்கள் புத்துணர்வு பெறும். 

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தூக்க மாத்திரை உட்கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு சில வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் சீரான தூக்கத்தைப் பெற முடியும். அதற்கான வழிகள் இதோ..

* ஆரோக்கியமான உணவு:
ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதன் மூலம் சீரான தூக்கத்தைப் பெற முடியும். பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளைச் சாப்பிடுவதால் நல்ல தூக்கத்தைப் பெற முடியும் என்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்னர் சாப்பிடுவது நல்லது.

* குளிர்ச்சியான அறை:
இரவில் படுத்ததும் தூங்க வேண்டுமானால், படுக்கை அறையை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம், உடலின் வெப்பநிலை குறைந்து விரைவாக தூங்க முடியும்.

* தியானம்:
ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவதற்கு தியானம் செய்வது எளிய வழியாகும். இரவில் படுக்கும் முன்பு தியானத்தில் ஈடுபடுவதன் மூலம், மனதில் உள்ள குழப்பங்கள் மற்றும் அழுத்தங்கள் நீங்கி, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.

* நிகழ்வுகள்:
காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை நாள் முழுவதும் என்னவெல்லாம் செய்தோம் என்று நினைவுபடுத்திப் பார்ப்பதன் மூலம் விரைவான தூக்கத்தைப் பெறலாம்.

* மஞ்சள் கலந்த பால்:
இரவில் நன்றாகத் தூங்குவதற்கு, ஒரு டம்ளர் பாலில் ¼ டீஸ்பூன் மஞ்சள்தூளைக் கலந்து மிதமான சூட்டில் குடித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.

* எலெக்ட்ரானிக் பொருட்கள்:
எலெக்ட்ரானிக் பொருட்களை படுக்கைக்கு அருகில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டாம். இவற்றில் இருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சம் தூக்கத்துக்கு இடையூறை ஏற்படுத்தும். படுத்ததும் தூங்க நினைப்பவர்கள், மொபைல், லேப்டாப் போன்றவற்றை 1 மணி நேரத்திற்கு முன்பாகவே பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள்.

* குறைந்த வெளிச்சம்:
படுக்கை அறையில் குறைவான வெளிச்சம் இருக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தினால் படுத்தவுடன் தூங்கிவிடலாம். கண்கள் இருட்டு நிலையை அடையும் போது தான் ஓய்வுக்கு செல்லும். மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி நிறைவான தூக்கத்தைப் பெற முடியும். 

Next Story