ஆரோக்கியம் அழகு

தும்மல் குறித்த சுவாரசியமான தகவல்கள் + "||" + sneezing with interesting..!

தும்மல் குறித்த சுவாரசியமான தகவல்கள்

தும்மல் குறித்த சுவாரசியமான தகவல்கள்
ஒவ்வொரு முறை தும்மும்போதும் ஒரு வினாடி இதயத் துடிப்பு நின்று, பின் அதிகமாகத் துடிக்கும். தும்மலை அடக்கும்போது முதுகு வலி, சுளுக்கு, சில சமயங்களில் எலும்பு முறிவுகூட உண்டாகலாம்.
டலில் பல்வேறு தன்னிச்சையான செயல்கள் நமது கட்டுப்பாடு இல்லாமல் நடைபெறும். அதில் ஒன்று தும்மல். பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்ற தொற்றுக்கிருமிகள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதற்கான வழிகளில் தும்மல் முக்கியமானது.

மூக்கு, நுரையீரல், கண் மற்றும் காதுகளில் இருக்கும் கிருமிகள் ஒவ்வாமையை உண்டாக்கும்போது ஏற்படும் எரிச்சல் உணர்வே தும்மலாக வெளிப்படுகிறது. தும்மும்போது மூக்கு மற்றும் நுரையீரலில் இருந்து 250 கி.மீ வேகத்தில் காற்று வெளியேற்றப்படுகிறது. அதேநேரம் பல்லாயிரக்கணக்கான உமிழ்நீர் மற்றும் சளி துகள்களும் அதன் மூலம் வெளியேறுகின்றன.

தும்மலை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு கட்டுப்படுத்தும்போது, சைனஸ் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, கடுமையான இருமல் ஏற்படும். மார்பு தசைகள், நுரையீரலுக்குக் கீழ் இருக்கும் தசைகள், வயிற்றுத் தசைகள், குரல் தண்டு தசைகள், தொண்டையின் பின்புறத்தில் உள்ள தசைகள், கண் இமைகளில் உள்ள தசைகள் ஆகியவற்றின் ஒருங் கிணைப்பால் தும்மல் உருவாகுகிறது.

தும்மல் வரும்போது கண்கள் தானாக மூடும். இது நம்மால் கட்டுப்படுத்த முடியாத அனிச்சை செயல். இதன் மூலம், கண்களுக்கு பின்புறம் ஏற்படும் அழுத்தமும், அசவுகரியமும் தடுக்கப்படும். மேலும் தும்மலின்போது வெளிப்படும் கிருமிகள், வைரஸ்கள் கண்களுக்குள் நுழையாமல் இருக்க இது உதவும்.  

ஒவ்வொரு முறை தும்மும்போதும் ஒரு வினாடி இதயத் துடிப்பு நின்று, பின் அதிகமாகத் துடிக்கும். தும்மலை அடக்கும்போது முதுகு வலி, சுளுக்கு, சில சமயங்களில் எலும்பு முறிவுகூட உண்டாகலாம்.

தூசு நிறைந்த இடத்தில் இருக்கும்போது நமக்கு உடனடியாக தும்மல் வரும். இதற்குக் காரணம், தூசுக்கள் மூக்கு வழியாக நுரையீரலுக்குச் செல்லும்போது, அங்குள்ள தும்மல் சுரப்பி நுரையீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்காக உடனடியாக சுரந்து அந்த தூசுக்களை தும்மல் வழியாக வெளியேற்றும்.

தொடர்ந்து தும்மும்போது உடலில் உள்ள உணர்ச்சி நிறைந்த தசைகளில் இறுக்கம் ஏற்படும். அவ்வாறு முதுகு, வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்படும் தசை இறுக்கத்தால் சிறுநீர்ப் பையில் அழுத்தம் ஏற்பட்டு, சிறுநீர் வரும் உணர்வு உண்டாகும். தும்மல் வரும்போது அதை நாம் அடக்கும் நேரம் மற்றும் நுரையீரலின் அளவைப் பொறுத்தே தும்மலுடன் சேர்த்து பெரும் சத்தமும் ஏற்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய பெண் குழந்தைகள் தினம்
சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி முதல் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது
2. சக்கர நாற்காலியில் அமர்ந்து சாதிக்கத் தூண்டும் டெல்பின்
என்னுடைய கவலைகளைக் காது கொடுத்து கேட்கவும் யாருமில்லை. அந்த நொடியில்தான், நாம் ஏன் இன்னொருவருக்கான காதுகளாக இருக்கக் கூடாது? எனத் தோன்றியது. உடனடியாக அதற்கான அமைப்பைத் தொடங்கினேன்.
3. வீட்டு உபயோகப் பொருட்கள் பராமரிப்பு
வீட்டில் யு.பி.எஸ். பயன்படுத்துபவர்கள் இன்வர்ட்டரை சார்ஜ் செய்யும்பொழுது, அதன் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகத்துடன் சார்ஜ் செய்யக் கூடாது.
4. சருமத்தை கண்ணாடி போல மாற்றும் ‘அரிசி பேஷியல்’
இந்த பேஷியல் சருமத்தில் எஞ்சி இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முற்றிலும் நீக்கும். முகம் பொலிவும் பெறும்.
5. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முன்மாதிரியான உமா
சிறந்த ஆசிரியர் என்பதை விட, மாணவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியான ஆசிரியராக மாறியிருக்கிறேன். காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.