கோடையை குதூகலமாக்கும் சமையலறை கருவிகள்


கோடையை குதூகலமாக்கும் சமையலறை கருவிகள்
x
தினத்தந்தி 11 April 2022 11:00 AM IST (Updated: 9 April 2022 3:37 PM IST)
t-max-icont-min-icon

சமையல் அறைக்குள் வேலை செய்து கொண்டிருக்கும்போது வியர்க்காமல் இருப்பதற்காக இந்த மினி பேனை பயன்படுத்தலாம்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள், நமது வாழ்க்கை முறையை எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றுகின்றன. அந்த வகையில் வெப்பம் நிறைந்த கால நிலையை சமாளிப்பதற்கு உதவும் சில சமையல் அறை சாதனங்களைப் பற்றிய தொகுப்பு இதோ…

மினி ஐஸ் கியூப் மேக்கர்
ரஸ்னா, ரோஸ்மில்க் போன்ற பானங்கள் தயாரிக்கும்போது குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டி போட்டு பருகுவோம். இந்த மினி ஐஸ் கியூப் மேக்கரின் வெளிப்பகுதியில் தண்ணீரை ஊற்றி பிரீஸரில் வைத்தால், ஒரே நேரத்தில் 24 ஐஸ் கட்டிகளை தயாரிக்க முடியும். இவ்வாறு தயாரித்த ஐஸ் கட்டிகளை நடுவில் உள்ள பகுதியில் சேமிக்க முடியும். 72 ஐஸ் கட்டிகள் வரை இதற்குள் சேமிக்கலாம். மூடியுடன் கூடிய இந்த சாதனம், ஐஸ் கட்டிகளை சுகாதாரமான முறையில் பாதுகாக்கும்.

போர்ட்டபிள் பிளெண்டர்
சில்லென்று பழச்சாறு குடிப்பதற்கு ஆசைப்படும்போது, உடனடியாக எந்த இடத்திலும் இந்த பிளெண்டரை இயக்க முடியும். கையில் கொண்டு செல்வதற்கு ஏற்ற வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது.  இந்த சாதனத்தை, லேப்டாப், கணினி, கார் அல்லது பிற யூ.எஸ்.பி சாதனங்கள் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். புரோட்டீன் ஷேக், ஸ்மூத்தி, ஜூஸ் தயாரிப்பதற்கு மட்டுமில்லாமல், எளிய பொருட்களை அரைப்பதற்கும் பயன் படுத்திக்கொள்ளலாம்.

மினி பேன்
சமையல் அறைக்குள் வேலை செய்து கொண்டிருக்கும்போது வியர்க்காமல் இருப்பதற்காக இந்த மினி பேனை பயன்படுத்தலாம். இறக்கைகள் இல்லாத இந்த பேன், எளிதில் சார்ஜ் செய்யும் வசதி கொண்டது, பாதுகாப்பானது. குழந்தைகள் இருக்கும் அறையிலும் இதை உபயோகிக்கலாம்.

வாட்டர் டிஸ்பென்சர்
மினரல் வாட்டர் பயன்படுத்துபவரா நீங்கள்? எனில் அந்த பெரிய கேனில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு சிரமப்பட வேண்டியது இல்லை. இந்த வாட்டர் டிஸ்பென்சரை தண்ணீர் கேனுடன் பொருத்தி விட்டு, தாகம் எடுக்கும்போது அதில் உள்ள பொத்தானை அழுத்தினால் போதும். உங்கள் தேவைக்கேற்ற நீரை எளிதாக எடுத்துக்கொள்ளலாம். யூ.எஸ்.பி மூலம் சார்ஜ் செய்யும் வசதி கொண்டது இந்த சாதனம்.

மினி ஐஸ் கிரீம் மேக்கர்
குறைந்த எடை உள்ள, கச்சிதமான வடிவம் கொண்ட இந்த மினி ஐஸ்கிரீம் மேக்கரை பயன்படுத்தி, நினைத்த நேரத்தில் ஐஸ்கிரீம் தயாரிக்க முடியும். பள்ளி விடுமுறையில் உள்ள உங்கள் குழந்தைகளுக்கு, இந்த சாதனத்தைக் கொண்டு ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே ருசியான ஐஸ்கிரீம் தயாரிக்கலாம். 

Next Story