வீட்டு பாதுகாப்புக்கு உதவும் கேட்ஜெட்ஸ்
இந்த கேமராவை வீட்டுக்கு உள்ளேயும், வெளியேவும் நிறுவ முடியும். ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரியின் மூலம் இதை இயக்கலாம். 24 மணி நேரமும் செயல்படக்கூடியது. 130 டிகிரியில் சுழலக்கூடியது. வானிலை மாற்றங்கள் மூலம் பாதிக்கப்படாது.
தற்போதைய காலத்தில் தனிப்பட்ட வகையில் மட்டுமின்றி, நாம் குடியிருக்கும் வீட்டுக்கும் முழுமையான பாதுகாப்பு முறைகளை மேற்கொள்வது அவசியமானதாகும். இதற்காக பல நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் புதிய தொழில்நுட்பக் கருவிகளை அறிமுகப் படுத்துகின்றன. கேமராக்கள், கடிகார அலாரங்கள், ஸ்மார்ட் பூட்டுகள் என பலவிதமான சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றைப் பற்றிய தொகுப்பு இங்கே…
வீடியோ டோர்பெல்
வழக்கமாக நாம் பயன்படுத்தும் அழைப்பு மணிகளை மின்சார இணைப்பு மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் இந்தக் கருவியை ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரியின் மூலம் இயக்கலாம். இதில் உள்ள தொழில்நுட்ப வசதியின் மூலம் நமது ஸ்மார்ட் போனுடன் இந்தக் கருவியை இணைத்துக்கொள்ள முடியும். இந்த வசதியைக்கொண்டு கதவுக்கு வெளியே இருப்பவர்களை அறிந்து கொள்ளலாம். மேலும், நீங்கள் வீட்டில் இல்லாத தருணங்களில், வீட்டுக்கு வெளியே நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்தல், பார்த்தல் மற்றும் பகிர்தலுக்கான அம்சங்களும் இதில் உள்ளன.
நெஸ்ட் கேம்
இந்த கேமராவை வீட்டுக்கு உள்ளேயும், வெளியேவும் நிறுவ முடியும். ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரியின் மூலம் இதை இயக்கலாம். 24 மணி நேரமும் செயல்படக்கூடியது. 130 டிகிரியில் சுழலக்கூடியது. வானிலை மாற்றங்கள் மூலம் பாதிக்கப்படாது. உரையாடல்களை தெளிவாகக் கேட்கக்கூடிய இருவழி மைக் அமைப்பைக் கொண்டது.
டோர் ஸ்டாப்பர் அலாரம்
கதவை திறந்து மூடுவதை கட்டுப்படுத்த உதவும் டோர் ஸ்டாப்பரில், அலாரம் செயல்பாடு அமைக்கப்பட்டுள்ளது. நாம் வெளியில் செல்லும்போது இதை இயங்கச் செய்து, கதவுக்கு அருகில் வைத்துவிட்டால் போதும். யாராவது தெரியாத நபர்கள், வீட்டுக்குள் நுழைவதற்காக கதவை திறக்கும்போது, இந்தக் கருவி அதிக சத்தத்துடன் ஒலிக்கும். அதன் மூலம் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உடனே வர முடியும். இந்தக் கருவியை பேட்டரி மூலம் எளிதாக இயக்கலாம். நாம் வீட்டில் இருக்கும் நேரங்களில், இதை சாதாரண டோர் ஸ்டாப்பராக உபயோகிக்க முடியும்.
மோஷன் சென்சார்
இந்தக் கருவியை வீட்டுக்கு உள்ளேயோ, வெளியிலோ பொருத்தலாம். நீங்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் ஆள் நடமாட்டம் இருந்தால், இந்தக் கருவியில் அமைக்கப்பட்டுள்ள ‘சென்சார்’ அதை உடனே உங்கள் ஸ்மார்ட் போனுக்கு தெரியப்படுத்தும். மங்கலான வெளிச்சத்திலும் இதில் உள்ள கேமராக்கள், நடமாடும் நபர்களை துல்லியமாக படம்பிடித்து உங்கள் மொபைல் போனுக்கு அனுப்பும்.
Related Tags :
Next Story