பணியிடத்தில் செயல்திறனை அதிகரிக்கும் வழிகள்


பணியிடத்தில் செயல்திறனை அதிகரிக்கும் வழிகள்
x
தினத்தந்தி 15 Nov 2021 11:00 AM IST (Updated: 13 Nov 2021 4:22 PM IST)
t-max-icont-min-icon

பணி சார்பான புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வத்துடன் இருக்க வேண்டும். புதிய முயற்சிகளில் துணிச்சலாக திட்டமிட்டு செயல்படுங்கள்.

ணிபுரியும் இடத்தில் தனது முன்னேற்றம் சீராக இருக்க வேண்டும் என்பது வேலைக்குச்  செல்லும் அனைவரது எண்ணமாகவும் இருக்கிறது. செயல்திறனை அதிகரித்துக் கொள்வதன் மூலம் இதனை சாத்தியமாக்கலாம். அதற்கான வழிகளை இங்கே தெரிந்துகொள்வோம். 

அலுவலக ரீதியான உறவுகளை முற்றிலுமாக  தவிர்க்காமல் இயன்றவரை அவற்றைப் பலப்படுத்த முயல வேண்டும். சக ஊழியர் முதல் உயர் அதிகாரி வரை சீரான பழக்கவழக்கத்தைக் கையாள வேண்டும். 
நீங்கள் பணிபுரியும் நிறுவனம் அளிக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும். 

பணி சார்பான புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வத்துடன் இருக்க வேண்டும். புதிய முயற்சிகளில் துணிச்சலாக திட்டமிட்டு செயல்படுங்கள். 

எவ்வகை பணியாக இருந்தாலும் பணியிட நெருக்கடி என்பது எல்லா இடங்களிலும் உண்டு. அமைதியான மனதுடன், தெளிவான பார்வையுடன், நம்பிக்கை கொண்டு நெருக்கடியான சூழலை அணுகுவதற்கு  பழகுங்கள். அதற்கு பொறுமையான அணுகுமுறை அவசியம்.

பணிபுரியும் இடத்தில் அனைவரிடமும் முரண்பாடுகள் இல்லாமல், ஒத்துப்போகும் தன்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும். அதே சமயம் உங்களோடு சேர்ந்து பணியில் மற்றவர்கள் ஒத்துழைக்கும் சூழலையும் உருவாக்குங்கள். உங்களுடன் இணைந்து செயல்படுவதை நல்ல அனுபவமாக மாற்றுவது உங்கள் கைகளில் உள்ளது.

புதியவற்றை எப்போதும் வரவேற்க வேண்டும். அதன் மூலம் சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் அவற்றை பொருட்படுத்தாமல் அடுத்தகட்டம் நோக்கி நகர்ந்து செல்லுங்கள். அவற்றை அடுத்தகட்ட வளர்ச்சிக்காக பயன்படுத்துவது உங்கள் கைகளில்தான் உள்ளது. 

தான் மேற்கொண்ட வேலையை, எந்த சிரமமான சூழ்நிலை ஏற்பட்டாலும் விட்டுக்கொடுக்காமல்  பணியாற்றும் பழக்கம் எப்போதும் நல்லது. ‘இவர் எந்தச் சூழலிலும், தனக்கான பணியைச் செய்து விடுவார்’ என்ற நம்பிக்கையை, பணியாற்றும் நிறுவனத்துக்கு ஏற்படுத்துவது அவசியமானதாகும்.

செயல்திறனை வளர்த்துக் கொள்வதற்கு  அன்றைய பணி பற்றிய விவரங்களை தினமும் இரவில் குறிப்பாக எழுதி வையுங்கள். அதை மாதம் ஒருமுறை மதிப்பீடு செய்யுங்கள். அதன் அடிப்படையில்  நீங்கள் இன்னும்  எந்தளவுக்கு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்பது தெரியவரும். 

Next Story