செயற்கை நுண்ணறிவு கொண்டு உங்கள் தொழிலை மேம்படுத்தி லாபம் ஈட்டும் வழிகள்..


செயற்கை நுண்ணறிவு கொண்டு உங்கள் தொழிலை மேம்படுத்தி லாபம் ஈட்டும் வழிகள்..
x
தினத்தந்தி 22 Nov 2021 11:00 AM IST (Updated: 20 Nov 2021 4:36 PM IST)
t-max-icont-min-icon

உங்கள் தொழிலில் ஏற்படும் சிக்கல்களைச் செயற்கை நுண்ணறிவு ஆராய்ந்து, அவற்றிற்கான மாற்று வழியை சில நொடிகளில் தயார் செய்து, உங்களையும் அதன்படி நடக்க வலியுறுத்தும்.

டிஜிட்டல் மயமாக மாறிவரும் வாழ்க்கை முறையில், தொழிலை மேம்படுத்தக் கூடிய வழிகளை ‘செயற்கை நுண்ணறிவு’ எளிதாக்குகிறது. ‘செயற்கை நுண்ணறிவு’ என்பது ‘ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் சுருக்கமாக AI எனப்படுகிறது. 

கணினி அறிவியலின் மேம்பட்ட வளர்ச்சி நிலையே ‘செயற்கை நுண்ணறிவு’. இது நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களைப்போல செயல்பட வைக்கும் நுணுக்கமான தொழில்நுட்பம் ஆகும். கொடுக்கப்படும் உள்ளீட்டிற்கு தகுந்ததுபோல் அதுவாகவே செயல்படும்.


நீங்கள் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும், அதில் உங்களுக்குச் செயற்கை நுண்ணறிவின் உதவி கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் தொழில், தொழில்நுட்பம் அல்லது இயந்திரங்களுடன் தொடர்புடையது என்றால் நிச்சயமாக உங்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயன்படும்.

இன்றைய கணினி மயமான உலகத்தில் மருத்துவம் முதல் விவசாயம் வரை அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு வேகமாக வளர்ந்து வருகிறது. உங்கள் தொழிலில் ஏற்படும் சிக்கல்களைச் செயற்கை நுண்ணறிவு ஆராய்ந்து, அவற்றிற்கான மாற்று வழியை சில நொடிகளில் தயார் செய்து, உங்களையும் அதன்படி நடக்க வலியுறுத்தும்.


இதன் மூலம், நீங்கள் சந்திக்கப் போகும் சிக்கல்களை முன்பே அறிந்து, அதிலிருந்து விலகி, சரியான வழியைப் பின்பற்றி லாபம் தரக்கூடிய வழியைத் தேர்வு செய்து வெற்றி அடையலாம். முன்பு பெரும் தொழில்களில் மட்டும் காணப்பட்ட செயற்கை நுண்ணறிவு, இப்போது சிறு தொழில்கள் மற்றும் புதிய தொழில் யுக்திகளை மேம்படுத்த உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

செயற்கை நுண்ணறிவு உங்கள் தொழிலில் இருப்பதன் நன்மைகள் என்ன?
  1. விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலை மேம்படுத்த உதவும்.
  2. வாடிக்கையாளர் சேவையை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப உங்கள் தொழிலை மேம்படுத்தும்.
  3. உற்பத்தித்திறன் மற்றும் செயல்பாட்டுத் திறன்களை அதிகரிக்கும்.
  4. வழக்கமான செயல்முறைகள் மற்றும் பணிகளைச் சரியாகத் திட்டமிட்டு நேரத்தையும், பணத்தையும் சேமிப்பதற்கு உதவும்.
  5. தொழில்நுட்பங்களின் அறிவாற்றல் வெளியீடுகளின் அடிப்படையில் விரைவான வணிக முடிவுகளை எடுக்கலாம்.
  6. தொழிலில் ஏற்படக்கூடிய ‘மனிதப் பிழை'களைத் தவிர்க்க உதவும்.
  7. அறிவார்ந்த ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்கும்.
  8. விற்பனை வாய்ப்புகளைக் கண்டறிந்து அதிகப்படுத்துவதன் மூலம் வருவாயை அதிகரிக்கும்.

Next Story