ஜப்பானியர் பின்பற்றும் நேர மேலாண்மை வழிமுறை


ஜப்பானியர் பின்பற்றும் நேர மேலாண்மை வழிமுறை
x
தினத்தந்தி 18 April 2022 6:09 AM GMT (Updated: 18 April 2022 6:09 AM GMT)

‘கான்பான்’ என்ற ஜப்பானிய சொல்லுக்கு ‘காட்சிப்பலகை’ என்று பெயர். கார் தயாரிப்பு நிறுவனம் அதனுடைய பல்வேறு பிரிவுகளில் அந்தப் பலகையை அமைத்தது. அதில் சம்பந்தப்பட்ட துறை மேற்கொள்ள வேண்டிய பணிகளின் செயல்திட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டது. அவற்றை அறிந்த பணியாளர்கள், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள உதவியது.

‘நேர மேலாண்மை’ அனைவருக்கும் அவசியமானது. நேரத்தை திட்டமிட்டு கையாள்பவர்களே எளிதில் வெற்றி பெறுகின்றனர். அந்த வகையில் ஜப்பானியர்கள் நேர மேலாண்மைக்காக உலக அளவில் பெயர் பெற்றவர்கள். தொழில்துறை வளர்ச்சி பெறத் தொடங்கிய காலகட்டமான 1940-களில் ஜப்பானின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்தில், நேர மேலாண்மையை கடைப்பிடிக்க ‘கான்பான்’ (KANBAN) என்ற புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த முறையை கடைப்பிடிப்பதன் மூலம் பணித்திறன், உற்பத்தி, தரம், டெலிவரி ஆகிய நான்கு விதங்களில் நிறுவனங்களின் செயல்திறன் மேம்படுத்தப்படுகிறது.

‘கான்பான்’ என்ற ஜப்பானிய சொல்லுக்கு ‘காட்சிப்பலகை’ என்று பெயர். கார் தயாரிப்பு நிறுவனம் அதனுடைய பல்வேறு பிரிவுகளில் அந்தப் பலகையை அமைத்தது. அதில் சம்பந்தப்பட்ட துறை மேற்கொள்ள வேண்டிய பணிகளின் செயல்திட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டது. அவற்றை அறிந்த பணியாளர்கள், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள உதவியது.

எந்தவொரு பணியையும், ‘கான்பான்’ முறை மூன்று பிரிவுகளாக பகுக்கிறது.

 முதல் பிரிவு, செய்யப்பட வேண்டிய பணிகள் எவை என்பதையும்,

 இரண்டாவது பிரிவு, நடைமுறையில் உள்ள பணிகளைப் பற்றியும்,

 மூன்றாவது பிரிவு, செய்து முடிக்கப்பட்ட பணிகள் பற்றியும் குறிப்பிடுகின்றன.
மேற்கண்ட மூன்று பிரிவுகளிலும், அவற்றின் நிலைக்கேற்ப உட்பிரிவுகளாகவும் பகுத்து குறிப்பிடப்படும். அதாவது,

 முதல் இரண்டு பிரிவுகளில் உடனடியாக செய்ய வேண்டிய பணிகள், அதற்கு அடுத்த கட்டத்தில் செய்ய வேண்டிய பணிகள், அன்றைய நாளுக்குள் முடிக்க வேண்டிய பணிகள் என்ற உட்பிரிவு வகைப்பாடுகள் அடங்கியிருக்கும்.

 மூன்றாவது பிரிவில், முடிக்கப்பட்ட பணிகளின் அப்போதைய நிலை பற்றியும், இதர கூடுதல் தகவல்கள் பற்றியும் குறிப்பிடப்படும்.

தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெறத்தொடங்கிய இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் ‘கான்பான்’ நேர மேலாண்மை செயல்திட்டம், பல நாடுகளில் பரவியது. இன்றைய சூழலில் செல்போன் செயலிகளாகவும், கணினி நிரல்களாகவும் இந்த முறை தனிநபர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

‘கான்பான்’ காட்சிப்பலகை முறையை அன்றாட வாழ்வில் எளிதாகப் பயன்படுத்தி, பணிகளைத் திட்டமிட்ட காலகட்டத்தில் செய்ய இயலும். இல்லத்தரசிகள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் இந்த முறை பயன்படக்கூடும். காட்சிப்பலகையாக வீட்டில் அமைத்து செயல் திட்டங்களைப் பிரித்து குறிப்பிட்டு, நேர மேலாண்மையை கடைப்பிடிக்கலாம். அல்லது ‘கான்பான்’ செல்போன் செயலிகள் மூலமாகவும் ஒருவரது நேர மேலாண்மையை கச்சிதமாக திட்டமிட்டு நிர்வகித்துக் கொள்ளலாம்

Next Story