பொழுதுபோக்கு

சமூக வலைத்தளங்களில் மூழ்குவதைத் தவிர்ப்பது எப்படி? + "||" + are u affected by social media virus..?

சமூக வலைத்தளங்களில் மூழ்குவதைத் தவிர்ப்பது எப்படி?

சமூக வலைத்தளங்களில் மூழ்குவதைத் தவிர்ப்பது எப்படி?
உங்களது தனிப்பட்ட தகவல்களை சமூக வலைத்தள கணக்குகள் ஆரம்பிக்கும்போது பகிர்ந்தால், அதை பாதுகாப்பான பகுதியில் வைத்திருக்கிறீர்களா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
றிவை விரிவு செய்யவும், உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ளவும், புதிய தொடர்புகளை உருவாக்கவும், கருத்துகளைத் தெரிவிக்கவும், பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கவும் என சமூக வலைத்தளங்களின் நன்மைகள் ஏராளம். வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து தலைமுறையைச் சேர்ந்தவர்களும், இன்று சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

இதில் நிறைய பேர், ஒரு கட்டத்துக்கு மேல் சமூக வலைத்தளங்களை கட்டுப்பாடோடு பயன்படுத்தாமல், அளவுக்கு அதிகமாக அதில் மூழ்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். வேலை, குடும்பம், உறவுகள் போன்றவற்றைத் தவிர்த்து, சமூக வலைத் தளங்களே கதி எனும் நிலைக்கு மாறி விடுபவர்களும் உண்டு. இதில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம் என்று பார்ப்போம்.

‘கவன ஈர்ப்பு’ என்பதே, பலரையும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாக மாற்றுகிறது. எனவே, அவற்றில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? எதற்காக உபயோகப்படுத்துகிறீர்கள்? இதனால் உங்களது மற்ற வேலைகள் பாதிக்கப்படாமல் இருக்கிறதா? என்பதை கவனித்துப் பாருங்கள். அதைப் பொறுத்து, முடிவு எடுங்கள்.

மேலே சொன்னபடி செய்தும், சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை என நினைத்தால், ஒரு நாளில் நீங்கள் அவசியம் முடிக்க வேண்டிய செயல்களை உங்களுக்கு நினைவுபடுத்துவதற்கான செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். இந்த செயலி சரியான நேரத்தில் உங்கள் அலுவல்களை குறித்து நினைவுப்படுத்தும். இதன் மூலம் நீங்கள் சமூக வலைத்தளங்களை 
உபயோகிக்கும் நேரத்தைக் குறைத்து, உங்கள் பணிகளைச் செய்ய முடியும்.

தற்போது சமூக வலைத்தளங்கள், பொழுதுபோக்கிற்கான இடம் என்பதைத் தாண்டி, சுயதொழில் செய்யும் நவீன தளமாகவும் மாறி வருகின்றன. குறிப்பாக கொரோனா காலத்தில் பெண்களுக்கு ஏற்ற, எளிதான வியாபாரத் தளமாக பல சமூக வலைத்தளங்கள் இருந்தன என்பதை மறுக்க முடியாது. எனவே, நீங்கள் எதற்காக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறீர்கள்? எவ்வாறு அதைக் கையாளுகிறீர்கள்? 
என்பதைக் கவனித்து, அதற்கு ஏற்றாற்போல பயன்படுத்த வேண்டும்்.

உங்களது தனிப்பட்ட தகவல்களை சமூக வலைத்தள கணக்குகள் ஆரம்பிக்கும்போது பகிர்ந்தால், அதை பாதுகாப்பான பகுதியில் வைத்திருக்கிறீர்களா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

முன்பே சொன்னது போல, சமூக வலைத்தளம் என்பது பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, கவன ஈர்ப்பு களமாக மாறும்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு அடிமையாகிறோம். எனவே, வலைத்
தளங்களில் உங்களுக்கு வரும் கவன ஈர்ப்புகள் நிஜமாகவே உங்களை மேம்படுத்திக்கொள்வதற்கான அடுத்த நிலைக்குக் கொண்டு செல்கிறதா? என்பதை உணர்ந்து கவனத்துடன் கையாளுங்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. மலைவாழ் மக்களிடையே மாற்றம் ஏற்படுத்திய மகாலட்சுமி
கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகள் நடந்தன. ஆனால், ஸ்மார்ட்போன் வாங்கும் வசதி இல்லாத காரணத்தால் பழங்குடி மாணவர்களின் கல்வியில் தேக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மீண்டும் கல்வியின் மீது கசப்பு வந்துவிடக் கூடாது என எண்ணினேன். எனவே, மீண்டும் மாணவர்களைத் தேடி அவர்களின் வீடுகளுக்கே சென்று பாடங்களை எடுக்கத் தொடங்கினேன்.
2. அழகுக்கு அழகு சேர்க்கும் ‘லைட்-வெயிட்’ மேக்கப்!
முகத்துக்கு அழகு சேர்ப்பவை கண்கள். அவற்றை அழகுபடுத்துவதன் மூலம் மேக்கப் முழுமை பெறும். ஐ ஷேடோ, ஐ லைனர், மஸ்காரா போன்ற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி கண்களின் அழகை அதிகரிக்கலாம்.
3. பேஷன் உலகில் கலக்கும் சந்தியா
சிறு வயதில் என் பள்ளி சார்பாக நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிக்காக தேர்ந்து எடுக்கப்பட்டேன். அதில் இருந்தே எனக்கு அழகாக ஆடை அணிவது மிகவும் பிடிக்கும். அதுவே நான் ஆடை வடிவமைப்பாளர் துறையை தேர்வு செய்ததற்கு எனக்கு தூண்டுதலாக இருந்தது.
4. உலக நீரிழிவு நோய் தினம்
நீரிழிவு நோயால் அதிகரித்து வரும் உடல் நல பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உலக நீரிழிவு நோய் கூட்டமைப்பும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து ‘உலக நீரிழிவு நோய் தின’த்தை அறிவித்தது. 1991-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ந் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
5. அடம்பிடிக்கும் குழந்தைகளை அசத்தும் ‘உணவு ஓவியம்’
உணவு ஓவியங்கள் வடிவமைப்பதற்கு பொறுமையும், ஆர்வமும் தேவை. ஒரு ஓவியத்தை வடிவமைப்பதற்கு ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் ஆகலாம். எனக்கு இது சிரமமாகத் தெரியவில்லை, சந்தோஷமாக இந்த நேரத்தைச் செலவிடுகிறேன்