நன்றாகச் சாப்பிடப் பிடிக்கும் - நடிகை மோனிகா சின்னகோட்லா


நன்றாகச் சாப்பிடப் பிடிக்கும் - நடிகை மோனிகா சின்னகோட்லா
x
தினத்தந்தி 19 Oct 2021 11:44 AM IST (Updated: 19 Oct 2021 11:44 AM IST)
t-max-icont-min-icon

மாடர்ன் பெண்ணான நான் ‘தோழர் வெங்கடேசன்' படத்தில் கிராமத்துப் பெண் வேடத்தில் நடித்திருந்தேன். நான் இதுவரை நடித்ததில், எனக்கு மனநிறைவைத் தந்த படம் அது.

ழகு, இளமை, திறமை மூன்றின் கலவையாக இருக்கிறார் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான மோனிகா சின்னகோட்லா. இதோ அவரது பேட்டி.

* உங்களைப் பற்றி?

அப்பா மதன், சொந்த ஊர் ஆந்திரா. அம்மா உமா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சென்னையில்  பிறந்த நான் ஒரு வயதில் இருந்து, 6-ம் வகுப்பு வரை கனடா நாட்டில்  வளர்ந்தேன். பின்பு சென்னை வந்து படிப்பைத் தொடர்ந்தேன். 

8-ம் வகுப்பு படிக்கும்போது, நடிக்க வேண்டும் எனும் ஆசையை அம்மாவிடம் சொன்னேன். அவர் தனது நண்பர் மூலம் எனக்கு வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் மூலம் சுசீந்திரன் இயக்கிய ‘ஜீவா' படத்தில் கதாநாயகி ஸ்ரீதிவ்யாவுக்கு தங்கையாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

* நடித்த படங்கள்?

இயக்குநர் சுசீந்திரன் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்ட நான், அவரது ‘ஜீனியஸ், ‘ஏஞ்சலீனா' படங்களிலும் நடித்தேன். அடுத்ததாக ‘டைம் அப்', ‘ஜீவி' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தவிர, ‘பகடி ஆட்டம்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறேன்.

* நடித்ததில் பிடித்தது?

மாடர்ன் பெண்ணான நான் ‘தோழர் வெங்கடேசன்' படத்தில் கிராமத்துப் பெண் வேடத்தில் நடித்திருந்தேன். நான் இதுவரை நடித்ததில், எனக்கு மனநிறைவைத் தந்த படம் அது. அதில் நான் நன்றாக நடித்திருந்ததாகப் பலரும் பாராட்டினார்கள்.  

* நடித்துக் கொண்டிருக்கும் படங்கள்?

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பேச்சிலர்ஸ்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ‘மீசைய முறுக்கு' படத்தில் கதாநாயகனுக்குத் தம்பியாக நடித்திருந்த ஆனந்த் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். 

‘அழியாத கோலங்கள்-2' படத்தை இயக்கிய எம். ஆர். பாரதியின் ‘ட்ரீம் கேர்ள்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன். இணையத் தொடர் ஒன்றிலும் நடித்திருக்கிறேன்.

* மாற்றிக் கொள்ள நினைப்பது?

ஸ்மார்ட் போனில் அதிக நேரம் செலவிடுவதையும், அதிக நேரம் தூங்கும் பழக்கத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

* பிடித்த விஷயங்கள்?

நன்றாகச் சாப்பிடப் பிடிக்கும். ஆந்திராவின் காரசார உணவுகளையே அதிகம் விரும்புவேன். தோழிகளுடன் சென்று சாலையோரக் கடைகளில் பானிபூரி சாப்பிடுவதும் மனதுக்கு உற்சாகம் தரும். பயணம் செய்வது பிடிக்கும். அமெரிக்க எழுத்தாளர் சிட்னிஷெல்டனின் நாவல்களை விரும்பிப் படிப்பேன். ஷாப்பிங் செல்வதும் எனக்கு பிடித்த விஷயம். 

Next Story