பொழுதுபோக்கு

ஒரு நாயகி உருவாகிறார் + "||" + shining star in cricket sky..!

ஒரு நாயகி உருவாகிறார்

ஒரு நாயகி உருவாகிறார்
நான் ‘ரைட் ஆர்ம் லெக் ஸ்பின்னர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டர்' ஆக விளையாடினேன். நாக்பூரில் நடந்த மாநில அளவிலான போட்டியில் ஜார்கண்ட், புதுச்சேரி, பெங்கால், டெல்லி மற்றும் கோவா அணிகளுடன் நடைபெற்ற போட்டிகளில் எனது பங்களிப்பை சிறப்பாக செய்தேன்.
19 வயதுக்கு உட்பட்டோர் விளையாடும் தமிழ்நாடு மாநில மகளிர் கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி இருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஐஸ்வர்ய லட்சுமி. தீவிரமான பயிற்சிக்கும், முயற்சிக்கும் பரிசாக இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறார். அவரது பேட்டி.

“திருப்பூரில் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் விளையாடி வரும் எனது சகோதரர்கள் இருவரையும் பார்ப்பதற்காக, பள்ளி விடுமுறை நாட்களில் தாயாருடன் செல்வேன். அப்போது கிரிக்கெட் விளையாட்டின் மீது எனக்கு இருந்த ஆர்வத்தை கவனித்த மைய நிர்வாகி ரமேஷ் குமார், என்னையும் பயிற்சியில் சேர்ந்து விளையாடுவதற்கு ஊக்கப்படுத்தினார். அவ்வாறுதான் கிரிக்கெட் விளையாட்டிற்குள் நுழைந்தேன்.

என் அம்மா பயிற்சி மையத்துக்கு அருகில் இருந்த கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்தார். அப்பா அங்குள்ள நூற்பு ஆலையில் ஓட்டுநராக வேலை செய்கிறார்.

எங்கள் கிராமத்தில் இருந்து பயிற்சி மையத்துக்கு வந்து போவது சிரமமாக இருந்தது. போக்குவரத்து செலவை சமாளிக்கும் அளவுக்கு குடும்ப பொருளாதார சூழ்நிலை இல்லை. பள்ளி படிப்பும் பாதிக்கப்பட்டது.
இதை அறிந்த கிரிக்கெட் பயிற்சி மைய நிர்வாகி, என் அம்மாவிற்கு 

‘‘பயிற்சி மையத்திலேயே வேலை வழங்கியதோடு மட்டுமில்லாமல், தங்குவதற்கு மைய வளாகத்திலே வீடும் ஒதுக்கிக் கொடுத்தார். அதுவரை கிராமத்தில் அரசுப் பள்ளியில் படித்த எனக்கு பயிற்சியைத் தொடர்வதற்கு ஏதுவாக மையத்தின் அருகில் உள்ள தனியார் பள்ளியில் இலவசமாக படிக்கவும் ஏற்பாடு செய்தார். அவருடைய உதவியால் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு இப்போது இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.’’மாநில இளையோர் அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைத்ததைப் பற்றி சொல்லுங்கள்?

19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணி தேர்வு சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டு அரங்கில் நடந்தது. அதில் பங்கு பெறுவதற்காக மாநிலம் முழுவதும் இருந்து 270-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்துகொண்டோம்.

அதிலிருந்து ‘நெட் செலக்சன்' விளையாட்டு மூலம் 60 பேரை முதலில் தேர்வு செய்தார்கள். பின்பு 4 அணிகளாகப் பிரித்து விளையாட வைத்து அதிலிருந்து 30 பேரை தேர்ந்தெடுத்தார்கள். நெட் பிராக்டிஸ் மற்றும் மேட்ச் மூலம் கடைசியாக 25 பேரை அணிக்காக தேர்வு செய்தார்கள். அதில் நானும் ஒருத்தி.

அணியில் உங்கள் பங்களிப்பு என்ன?

நான் ‘ரைட் ஆர்ம் லெக் ஸ்பின்னர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டர்' ஆக விளையாடினேன். நாக்பூரில் நடந்த மாநில அளவிலான போட்டியில் ஜார்கண்ட், புதுச்சேரி, பெங்கால், டெல்லி மற்றும் கோவா அணிகளுடன் நடைபெற்ற போட்டிகளில் எனது பங்களிப்பை சிறப்பாக செய்தேன்.

எதிர்கால இலக்கு என்ன?

இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பதுதான் எனது இலக்கு. ஆர்வமும், வெற்றிபெற வேண்டும் என்ற உறுதியும் இருந்தால் குடும்ப, பொருளாதார பின்னணிகள் பொருட்டே இல்லை என்பது பெண்களுக்கு இவர் சொல்ல வரும் செய்தியாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. மலைவாழ் மக்களிடையே மாற்றம் ஏற்படுத்திய மகாலட்சுமி
கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகள் நடந்தன. ஆனால், ஸ்மார்ட்போன் வாங்கும் வசதி இல்லாத காரணத்தால் பழங்குடி மாணவர்களின் கல்வியில் தேக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மீண்டும் கல்வியின் மீது கசப்பு வந்துவிடக் கூடாது என எண்ணினேன். எனவே, மீண்டும் மாணவர்களைத் தேடி அவர்களின் வீடுகளுக்கே சென்று பாடங்களை எடுக்கத் தொடங்கினேன்.
2. அழகுக்கு அழகு சேர்க்கும் ‘லைட்-வெயிட்’ மேக்கப்!
முகத்துக்கு அழகு சேர்ப்பவை கண்கள். அவற்றை அழகுபடுத்துவதன் மூலம் மேக்கப் முழுமை பெறும். ஐ ஷேடோ, ஐ லைனர், மஸ்காரா போன்ற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி கண்களின் அழகை அதிகரிக்கலாம்.
3. பேஷன் உலகில் கலக்கும் சந்தியா
சிறு வயதில் என் பள்ளி சார்பாக நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிக்காக தேர்ந்து எடுக்கப்பட்டேன். அதில் இருந்தே எனக்கு அழகாக ஆடை அணிவது மிகவும் பிடிக்கும். அதுவே நான் ஆடை வடிவமைப்பாளர் துறையை தேர்வு செய்ததற்கு எனக்கு தூண்டுதலாக இருந்தது.
4. பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவிகிதம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், உடன் இருப்பவர்கள், பணியிடம் மற்றும் பயிலும் இடங்களில் உள்ளவர்களால் ஏற்படுகிறது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
5. முத்தமிழ் வளர்க்கும் மணிமொழி
இயல், இசை, நாடகம் மூலமாக தமிழ்த்தொண்டு ஆற்றுவதே என் வாழ்நாள் லட்சியம். உயர்தனிச் செம்மொழியான தமிழ் மொழியின் அருமை இளைய தலைமுறைக்குத் தெரியவில்லை என்பது எனது ஆதங்கம். என் பேச்சு, கவிதை, பாடல் போன்றவற்றின் மூலம் தமிழை அவர்களிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறேன்.