பொழுதுபோக்கு

வெளிநாட்டில் அசத்தி வரும் தமிழ் பெண் + "||" + tamil model shines in foreign industry

வெளிநாட்டில் அசத்தி வரும் தமிழ் பெண்

வெளிநாட்டில் அசத்தி வரும் தமிழ் பெண்
மாடலாக இருக்க வேண்டும் என்றால், சரும ஆரோக்கியம் முக்கியமானது. சரும வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே தினமும் வைட்டமின் டி கிடைப்பதற்காக சூரிய குளியல் எடுப்பேன்.
னடாவில் வசிக்கும் தமிழ் பெண் சந்தியா ஞானமேகன். மாடலிங், திரைப்படம் ஆகியவற்றின் மூலம் அங்கு பிரபலமாக இருக்கிறார். 

சந்தியா 3 வயதாக இருந்தபோது இவரது பெற்றோர் இலங்கையில் இருந்து கனடாவில் குடியேறினார்கள். அப்போதிலிருந்து சந்தியா கனடாவில் வசித்து வருகிறார்.

இனி அவரே தொடர்கிறார்…

“நான் படித்தது பி.ஏ. பொருளாதாரம். தமிழ் தவிர ஆங்கிலம், பிரெஞ்சு, கனடியன் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொண்டேன்.  கல்லூரியில் படிக்கும்போது வேறு ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்று கருதினேன். சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் இருந்தது. 

கேமராவின் முன்பு நின்று நடிக்க வேண்டும் என்றால், அதற்கு அனுபவம் தேவை. எனவே மாடலிங் துறை மீது கவனம் செலுத்தினேன். எனது 17-வது வயதில் மாடலிங் துறைக்கு வந்தேன். முதன் முதலில் ‘போட்டோ ஷூட்’ எடுத்தபோது  கூச்சமாக இருந்தது. பின்பு கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிக் கொண்டேன்.

ஆடை, அழகு சார்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு மாடலிங் செய்து வருகிறேன்.

நான் நடிக்கப்போகும் விளம்பரம் மக்களுக்குப் பயனுள்ளதா? ஏதேனும் எதிர் விளைவுகளை ஏற்படுத்துமா? என்பது குறித்து ஆய்வு செய்தபின்பு தான் அதில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்வேன். 

பணத்திற்காக மட்டுமே மாடலிங் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை.

மாடலாக இருக்க வேண்டும் என்றால், சரும ஆரோக்கியம் முக்கியமானது. சரும வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே தினமும் வைட்டமின் டி கிடைப்பதற்காக சூரிய குளியல் எடுப்பேன். ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியும், மெல்லோட்டப் பயிற்சியும் மேற்கொள்வேன். பின்பு ஜிம்மில் ஒரு மணி நேரம் எடைப் பயிற்சிகளை செய்கிறேன்.   

காய்கறிகள், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட கனிகளை அதிகம் சாப்பிடுவேன். முடிந்த வரை வீட்டிலேயே உணவு தயாரித்து சாப்பிடுவேன். வெளியில் விற்கும் உணவுகளைப் பெரும்பாலும் தவிர்ப்பது என்னுடைய வழக்கம். தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் சரும பராமரிப்பு முறைகளை செய்த பின்பே, தூங்குவதற்குச் செல்வேன். 

தமிழக மக்களோடு நட்புறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். தற்போது மூன்று தமிழ்ப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன்’’ என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய பெண் குழந்தைகள் தினம்
சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி முதல் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது
2. சக்கர நாற்காலியில் அமர்ந்து சாதிக்கத் தூண்டும் டெல்பின்
என்னுடைய கவலைகளைக் காது கொடுத்து கேட்கவும் யாருமில்லை. அந்த நொடியில்தான், நாம் ஏன் இன்னொருவருக்கான காதுகளாக இருக்கக் கூடாது? எனத் தோன்றியது. உடனடியாக அதற்கான அமைப்பைத் தொடங்கினேன்.
3. வீட்டு உபயோகப் பொருட்கள் பராமரிப்பு
வீட்டில் யு.பி.எஸ். பயன்படுத்துபவர்கள் இன்வர்ட்டரை சார்ஜ் செய்யும்பொழுது, அதன் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகத்துடன் சார்ஜ் செய்யக் கூடாது.
4. சருமத்தை கண்ணாடி போல மாற்றும் ‘அரிசி பேஷியல்’
இந்த பேஷியல் சருமத்தில் எஞ்சி இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முற்றிலும் நீக்கும். முகம் பொலிவும் பெறும்.
5. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முன்மாதிரியான உமா
சிறந்த ஆசிரியர் என்பதை விட, மாணவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியான ஆசிரியராக மாறியிருக்கிறேன். காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.