இயக்குநர் ஆவதே எனது லட்சியம் - நடன இயக்குநர் ராதிகா
கடின உழைப்பு. சிறிய படம், பெரிய படம், பிரபலமானவர்களின் படம் என்றெல்லாம் வித்தியாசப்படுத்தி பார்ப்பதில்லை. எந்தப் படமாக இருப்பினும் அதில் என்னுடைய தனித்துவம் தெரியும் வரை கடினமாக உழைப்பேன்.
எப்பொழுதும் மற்றவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பவர் நடன இயக்குநர் ராதிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வெளிவந்த 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடனக் கலைஞராக பணியாற்றியிருக்கிறார். அவரது பேட்டி...
உங்களைப் பற்றி?
நான் பழம்பெரும் நடிகை பி.சீதாலட்சுமியின் மகள். எனது அம்மா பல்வேறு திரைப்படங்களில் நடித்து, அரசின் பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவரைப் பார்த்து நான் சினிமா துறையில் நுழைந்தேன். முப்பது வருடங்களாக இந்தத் துறையில் பணியாற்றுகிறேன்.
நீங்கள் நடன இயக்குநராக பணியாற்றிய முதல் படம் எது? அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்..
‘தாலாட்டு’ என்ற திரைப்படத்தில் தொடங்கி, பல்வேறு படங்களில், பல நடன இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணியாற்றினேன். 2011-ம் ஆண்டு வெளிவந்த இயக்குநர் மிஷ்கினின் ‘முகமூடி’ திரைப்
படத்தின் மூலம் நடன இயக்குநர் ஆனேன். முதல் படம் என்பதால் மிகவும் பயமாக இருந்தது. ஆனால், மிஷ்கின் என்னை தொடர்ந்து ஊக்குவித்தார். என்னுடைய திறமையை வெளிக்கொண்டு வந்தவர்களில் அவரும் ஒருவர்.
நடனத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
இரண்டு வயதில் இருந்தே பரதநாட்டியம் கற்றுக் கொண்டேன். சிறுவயதில் என்னுடைய எண்ணம்
முழுவதும் பரதநாட்டியத்தின் மீதுதான் இருந்தது. அதில் இருந்து நடனத்தை என்னுடைய எதிர்காலமாக பார்க்கத் தொடங்கினேன்.
உங்களுடைய வருங்கால திட்டம் என்ன?
திரைப்பட இயக்குனராக வேண்டும் என்பது என்னுடைய நீண்ட கால கனவு. அதற்கான பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.
உங்கள் வெற்றியின் ரகசியமாக எதைப் பார்க்கிறீர்கள்?
கடின உழைப்பு. சிறிய படம், பெரிய படம், பிரபலமானவர்களின் படம் என்றெல்லாம் வித்தியாசப்படுத்தி பார்ப்பதில்லை. எந்தப் படமாக இருப்பினும் அதில் என்னுடைய தனித்துவம் தெரியும் வரை கடினமாக உழைப்பேன்.
நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
நம்முடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நடனம் சிறந்த பயிற்சியாகும். நான் 20 வருடமாக நடனப் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறேன். சமீபத்தில் நடன வகுப்பில் இணைந்த பெண்ணுக்கு 60 வயது இருக்கும். தொடர்ந்து நடனப் பயிற்சி மேற்கொண்டார். உடல் நலக் குறைவிற்காக சிகிச்சை பெற்றுவந்த அவர், நடனத்தின் மூலம் பயனடைந்திருக்கிறார். அவருடைய மருத்துவர்கள் கூட வியந்திருக்
கிறார்கள்.
உங்களுடைய தேவதை யார்?
என்னுடைய அம்மாதான். என்னை தன்னம்பிக்கையோடு வளர்த்து என் இலக்கினை நோக்கி பயணிப்பதற்கு தொடர்ந்து உறுதுணையாக இருந்தார்.
குடும்பத்தில் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?
எனது கணவரும், மகனும் என்னுடைய வெற்றியை மனதில் கொண்டு, தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். என்னுடைய வெற்றிக்கு காரணம் என் குடும்பம் தான்.
Related Tags :
Next Story