செல்போனில் செயலியை பதிவிறக்கம் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை


செல்போனில் செயலியை பதிவிறக்கம் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
x
தினத்தந்தி 9 May 2022 11:00 AM IST (Updated: 7 May 2022 4:12 PM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பான முறையில் செயலியை பதிவிறக்கம் செய்வதே, தவறான வழிகளைத் தடுப்பதற்கான முதல் வழி.

தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்லும் இந்த காலகட்டத்தில், பெட்டிக்கடையில் பொருட்கள் வாங்குவது முதல் வங்கிக் கடன் வரை அனைத்துக்கும் செல்போன் பயன்பாடே முதல் தேர்வாக இருக்கிறது. புகைப்படம் எடுப்பது, நண்பர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்புவது, பில் செலுத்துவது, வங்கி பண பரிமாற்றம், ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது என அனைத்து வேலை
களையும் செல்போன் மூலம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். இப்படியான சூழலில், நம்மைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள் செல்போனில் பதியப்படுகிறது. 

இந்த விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறதா? என்பதை அவசர சூழலில் பலரும் கவனிக்கத் தவறுகிறோம். அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும். அவை குறித்து இங்கு பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான செல்போன்கள் ஹேக்கிங் செய்யப்படுகின்றன. அவை பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் செல்போன் செயலிகள் மூலமாகவே நிகழ்கின்றன. காரணம், நம் செல்
போனில் உள்ள புகைப்படம், வீடியோ, டாக்குமெண்ட், வங்கி விபரங்கள் மற்றும் தனிப்பட்ட விபரங்கள். இவற்றைக்கொண்டு நம்முடைய தினசரி நடவடிக்கைகளை கண்காணிக்க இயலும். 

பாதுகாப்பான முறையில் செயலியை பதிவிறக்கம் செய்வதே, தவறான வழிகளைத் தடுப்பதற்கான முதல் வழி. குறுஞ்செய்திகளில் வரும் லிங்கையோ, வலைத்தளங்களில் வரும் லிங்கையோ பயன்படுத்தி செயலியை பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்கவும். எந்த செயலியாக இருந்தாலும், அதை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்வது சிறந்த முறை. 

அவ்வாறு செயலி பதிவிறக்கம் செய்யும்போது கேட்கப்படும் கேள்விகளை நன்றாகப் படித்துப்பார்த்து, அதன் செயல்முறை குறித்து தெளிவாக உணர்ந்த பின்பு பதிவிறக்கம் செய்வது நல்லது.

சில செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது, உங்களது செல்போனில் உள்ள போட்டோ, வீடியோ மற்றும் கான்டாக்ட் போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ள ‘ஆப்ஷன்’ கேட்கும். நாம் ‘நோ’ என்று மறுப்பு கொடுக்கும் பட்சத்தில் செயலி பதிவிறக்கம் ஆவது தடைபடும்.

இப்படியான சூழலில் ‘எஸ்’ கொடுத்து செயலியை பதிவிறக்கம் செய்த பின்பு, செல்போன் செட்டிங்கில், செயலியின் விவரங்கள் பக்கத்தில் ‘பர்மிஷன்’ என்ற ஆப்ஷன் இருக்கும். அதை ‘கிளிக்’ செய்தால் உங்கள் செல்போனில் உள்ள என்னென்ன தகவல்கள், அந்த செயலியில் இணைக்கப்பட்டுள்ளது அல்லது அந்த செயலியில் பயன்படுத்த முடியும் என்ற பட்டியலைக் காட்டும். அதில் நமக்குத் தேவையில்லாத அல்லது நம் தனிப்பட்ட விவரங்கள் இருப்பவற்றை கிளிக் செய்து ‘டினை’ (Deny) என்ற ஆப்ஷனைக் கொடுக்கவும். இது உங்களின் தனிப்பட்ட விவரங்கள் செயலியில் இணைக்கப்படுவதைத் தடுக்கும்.

செல்போன் செட்டிங்கில் பேட்டரி ஆப்ஷனை தேர்வு செய்து ‘போன் பேட்டரி யூசேஜ்’-ஐக் (Phone battery usage) கிளிக் செய்யவும். இது உங்கள் செல்போனில் எந்தெந்த செயலி, எவ்வளவு நேரம் இயக்கத்தில் இருந்தது என்பதையும், செயலி இயங்க எடுத்துக்கொண்ட சார்ஜின் அளவையும் காட்டும். 

இதில் நீங்கள் பயன்படுத்திய செயலி தவிர வேறு மறைக்கப்பட்ட செயலி இயங்கிக்கொண்டிருந்தாலும் தெரிந்துவிடும். இதன் மூலம் அச்செயலியை கண்டறிந்து ‘அன் இன்ஸ்டால்’ செய்துவிடலாம். இது உங்கள் செல்போனில் உள்ள தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தும். 

Next Story