கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற மே 15-ந்தேதி அன்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fire up your playlists with @anirudhofficial’s explosive tracks from #Vikram on may 15th!#VikramAudioLaunch#KamalHaasan#VikramFromJune3@ikamalhaasan@Udhaystalin@Dir_Lokesh@VijaySethuOffl#FahadhFaasil#Mahendran@RKFI@turmericmediaTM@SonyMusicSouthpic.twitter.com/FQL0yo5ncp
— Red Giant Movies (@RedGiantMovies_) May 2, 2022
Related Tags :
Next Story