ஐ.பி.எல்: மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு


ஐ.பி.எல்: மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 2 Oct 2021 9:57 AM GMT (Updated: 2 Oct 2021 11:31 AM GMT)

மும்பை அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

துபாய்,

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள  46-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ரிஷப் பண்ட்  தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன. 

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன்  ரிஷப் பண்ட்  முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து,  மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

டெல்லி அணி நடப்பு சீசனில் விளையாடிய 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. மும்பை அணி 11 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பதிவு செய்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போராடி வருகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை 16 முறையும், டெல்லி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. பிளே-ஆப் பந்தயத்தில் தொடர்ந்து பயணிக்க இன்றைய போட்டி மும்பை அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

மும்பை அணியில் மாற்றமாக ஜெயந்த் யாதவ்  சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லி அணியில் மாற்றமாக பிரித்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார்.


Next Story