தென் ஆப்பிரிக்க டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் ரத்து.!


தென் ஆப்பிரிக்க டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் ரத்து.!
x
தினத்தந்தி 27 Dec 2021 12:26 PM GMT (Updated: 27 Dec 2021 12:26 PM GMT)

மழையால் இன்று ஒரு பந்து கூட வீச முடியாமல் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

செஞ்சூரியன், 

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் இந்த டெஸ்டில் இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில்  முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. லோகேஷ் ராகுல் 122 ரன்களுடனும் (248 பந்து, 17 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரஹானே 40 ரன்களுடனும் (81 பந்து, 8 பவுண்டரி) களத்தில் உள்ளனர்.  

இன்று 2-வது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால், மழை காரணமாக ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. நிலைமை சரியான பின்னர் ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஒரு பந்து கூட வீச முடியாமல்ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

நாளை நடைபெற இருக்கும் மூன்றாம் நாள் ஆட்டம் அரைமணி நேரம் முன்கூட்டியே தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story