இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்கு


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்கு
x
தினத்தந்தி 20 March 2022 6:05 PM GMT (Updated: 20 March 2022 6:05 PM GMT)

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசுக்கு 282 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

பிரிட்ஜ்டவுன்,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரூகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது,

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, கேப்டன் ஜோ ரூட் 153 ரன்கள், அவருடன் ஜோடி சேர்ந்த லாரன்ஸ்  91 ரன்கள் மற்றும் பென் ஸ்டோக்ஸ்சின் அதிரடி சதம் ஆகியோரின் பங்களிப்பில் 150.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 507 ரன்கள் குவித்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. 

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. அந்த அணியிதொடக்க ஆட்டக்காரரான கேப்டன் பிராத்வெயிட் மற்றும் ஜெர்மைன் பிளாக்வுட் ஆகியோரின் சதத்தால், அந்த அணி 187.5 ஓவர்களில் 411 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. 

இதையடுத்து தனது இரண்டாம் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி ஆட்டத்தின் கடைசி நாளான இன்று 39.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி வெஸ்ட் இண்டீசுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.


Next Story