கஞ்சா கடத்தல் ஆந்திராவை சேர்ந்தவர் கைது 12 கிலோ கஞ்சா பறிமுதல்


கஞ்சா கடத்தல் ஆந்திராவை சேர்ந்தவர் கைது 12 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 6 May 2017 8:41 PM GMT (Updated: 6 May 2017 8:40 PM GMT)

கோலார் மாவட்டம் மாலூர் ரெயில் நிலையம் முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் ஒருவர் கஞ்சாவுடன் நிற்பதாக நேற்று மாலூர் கலால் துறையினருக்கு தகவல் வந்தது.

கோலார் தங்கவயல்,

கோலார் மாவட்டம் மாலூர் ரெயில் நிலையம் முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் ஒருவர் கஞ்சாவுடன் நிற்பதாக நேற்று மாலூர் கலால் துறையினருக்கு தகவல் வந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற கலால் துறை போலீசார் கையில் ஒரு பார்சலுடன் நின்றவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், பிடிபட்டவர் ஆந்திர மாநிலம் புட்டப்பர்த்தி அருகே வீரஆஞ்சனேய பள்ளி கிராமத்தை சேர்ந்த ரவீந்திரா (வயது 55) என்பதும், இவர் ஆந்திராவில் இருந்து ரெயிலில் மாலூருவுக்கு கஞ்சா கடத்தி வந்ததும், பின்னர் இங்கிருந்து தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருவுக்கு அவற்றை கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதைதொடர்ந்து ரவீந்திராவை போலீசார் கைது செய்தனர். கைதானவரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மாலூர் கலால் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story