ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது ஆட்டோ டிரைவரை தாக்கிய மாநகராட்சி கமி‌ஷனர் வீடியோ வெளியாகி பரபரப்பு


ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது ஆட்டோ டிரைவரை தாக்கிய மாநகராட்சி கமி‌ஷனர் வீடியோ வெளியாகி பரபரப்பு
x
தினத்தந்தி 14 May 2017 4:13 AM IST (Updated: 14 May 2017 4:12 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது ஆட்டோ டிரைவரை தானே மாநகராட்சி கமி‌ஷனர் தாக்கி உள்ளார். இந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தானே,

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது ஆட்டோ டிரைவரை தானே மாநகராட்சி கமி‌ஷனர் தாக்கி உள்ளார். இந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாநகராட்சி அதிகாரி மீது தாக்குதல்

தானேயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற மாநகராட்சி துணை கமி‌ஷனர் சந்திப் மால்வி என்பவர் நடைபாதை வியாபாரிகளால் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் மாநகராட்சி கமி‌ஷனர் சஞ்சீவ் ஜெய்ஸ்வால் தானே நேரில் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

காவ்தேவி ரோடு, ஸ்டே‌ஷன் ரோடு, ஜாம்புலிநாக்கா உள்ளிட்ட இடங்களில் அவர் சட்டவிரோத நடைபாதை வியாபாரிகள் மற்றும் சட்டவிரோதமாக சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டார்.

டிரைவரை தாக்கிய கமி‌ஷனர்

இந்த நடவடிக்கையின் போது கமி‌ஷனர் சஞ்சீவ் ஜெய்ஸ்வால் போலீசார் முன்னிலேயிலேயே ஒரு ஆட்டோ டிரைவரை தாக்கி இருக்கிறார். அவரது தனிப்பட்ட மெய்காவலர்களும் தாக்கி உள்ளனர். இதுமட்டுமின்றி சஞ்சீவ் ஜெய்ஸ்வால் தன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒரு வாலிபரின் சட்டை காலரை பிடித்து இழுத்து இருக்கிறார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ஆட்டோ டிரைவரை தாக்கிய மாநகராட்சி கமி‌ஷனர் சஞ்சீவ் ஜெய்ஸ்வால் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என துணை போலீஸ் கமி‌ஷனர் டி.எஸ்.சுவாமியிடம் கேட்டதற்கு, இதுபற்றி விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.


Next Story