இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Jun 2017 3:30 AM IST (Updated: 1 Jun 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு விதித்த தடைக்கு, எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்,

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு விதித்த தடைக்கு, எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிழக்கு மாவட்ட தலைவர் முகமது தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பவுசூர்ரகுமான் வரவேற்றார். எஸ்.டி.டி.யு. மாநில பொதுச்செயலாளர் அஜித்ரகுமான் முன்னிலை வகித்தார்.

மேலும் எஸ்.டி.பி.ஐ., காங்கிரஸ், தமிழ் புலிகள் அமைப்பு மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், மாட்டு இறைச்சி கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு விதித்த தடையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story