பட்டாசு ஆலை விபத்தில்பலியானோர் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும்


பட்டாசு ஆலை விபத்தில்பலியானோர் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 7 Jun 2017 3:45 AM IST (Updated: 6 Jun 2017 11:26 PM IST)
t-max-icont-min-icon

பட்டாசு ஆலை விபத்தில்பலியானோர் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் கலெக்டரிடம் மனு

 விருதுநகர்,

கடந்த டிசம்பர் மாதம் பந்துவார்பட்டியில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் போது இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று பட்டாசு–தீப்பெட்டி தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் தங்களது குடும்பத்தினருக்கு வேலை வழங்கக் கோரி மனு கொடுத்தனர்.


Next Story