மாட்டு இறைச்சிக்கான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது


மாட்டு இறைச்சிக்கான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது
x
தினத்தந்தி 7 Jun 2017 3:45 AM IST (Updated: 7 Jun 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

மாட்டு இறைச்சிக்கான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க கோரி கோவையில் அ.தி.மு.க. அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

கோவை,

மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி, கோவையில் அ.தி.மு.க. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

முற்றுகையிட முயற்சி

மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், சென்னையில் இன படுகொலைக்கு எதிராக நினைவு நிகழ்ச்சி நடத்தி கைதான திருமுருகன், டைசன், இளமாறன், அருண் ஆகியோர் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தியும், கோவை யில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப் பினர் அறிவித்து இருந்தனர்.

இதன்படி நேற்று காலை ஆதிதமிழர் கட்சி மாநில தலைவர் வெண்மணி, மாணவர் எழுச்சி இயக்க நிர்வாகி பார்த்திபன் ஆகியோர் தலைமையில் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் கோ‌ஷமிட்டபடி அ.தி.மு.க. அலுவலகத்தை முற்றுகையிடும் முயற்சியாக ஊர்வலமாக சென்றனர்.

17 பேர் கைது

அப்போது அவர்களை தெற்கு தாலுகா அலுவலகம் அருகில் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய் தனர். 4 பெண்கள் உள்பட 17 பேரை வேனில் ஏற்றி ஒரு மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அ.தி.மு.க. அலுவலகத்தை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

அ.தி.மு.க. அலுவலகத்தை முற்றுகையிடுவது தொடர்பான தகவல் அறிந்த அ.தி.மு.க. (அம்மா) அணி யை சேர்ந்தவர்கள் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி அலுவலகத்தில் குவிந்து இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் போராட்டக்காரர்களை கட்சி அலுவலகத்துக்கு வரும் முன்பே போலீசார் கைது செய்ததது குறிப்பிடத்தக்கது.


Next Story