அம்பேத்கர் உருவப்படத்தை அவமதித்த வழக்கில் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


அம்பேத்கர் உருவப்படத்தை அவமதித்த வழக்கில் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 Jun 2017 1:38 AM IST (Updated: 12 Jun 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கர் உருவப்படத்தை அவமதித்த வழக்கில் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கொள்ளேகால்,

அம்பேத்கர் உருவப்படத்தை அவமதித்த வழக்கில் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அம்பேத்கர் உருவப்படம் அவமதிப்பு

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் டவுன் பீமாநகர் பகுதியில் உள்ள அம்பேத்கர் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்மநபர்கள் அவமதிப்பு செய்தனர். இதில் தொடர்புடைய மர்மநபர்களை உடனடியாக கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதிதிராவிட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கொள்ளேகால் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் அம்பேத்கர் உருவப்படத்தை அவமதிப்பு செய்ததாக பீமாநகர் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நிபந்தனை ஜாமீன்

மேலும் கைதானவர்கள் மீது சாம்ராஜ்நகர் மாவட்ட ஜூடிசியல் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மது என்பவர் தலைமறைவாக உள்ளார்.

இந்த நிலையில் கைதான ஸ்டாலின் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சாம்ராஜ்நகர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரின் மனுவை நீதிபதி நிராகரித்தார். இதனால் அவர் தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.

அதேப்போல் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மதுவும் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவையும் விசாரித்த நீதிபதி மதுவுக்கு சில நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.


Next Story