1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் மாநாட்டில் தீர்மானம்
தமிழகத்தில் சுய நிதி உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர் கூட்டணி மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் 17-வது மாநில மாநாடு மற்றும் இளைஞர் அணி மாநாடு நேற்று திருச்சியில் நடந்தது. மாநாட்டில் மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.சி. முத்துசாமி தலைமை தாங்கினார். மாநாட்டு மலரை முன்னாள் அமைச்சர் நல்லுசாமி வெளியிட அதனை கொங்கு நாடு கல்வி நிறுவனங்கள் தலைவர் பெரியசாமி பெற்றுக்கொண்டார்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழக அரசின் ஏழாவது ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு 1-1-2006 முதல் பல லட்சம் ரூபாய் ஊதிய இழப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது எட்டாவது ஊதிய குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மத்திய அரசுக்கு இணையாக உயர்த்தி எட்டாவது ஊதிய குழு ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும்.
ஓய்வூதியம் பெறும் காலம் குறைப்பு
பதவி உயர்வில் உயர் பதவி பெற்று செல்லும் ஆசிரியர் களுக்கும் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தமிழாசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். முழு ஓய்வூதியம் பெறுவதற்கான காலத்தை 30 ஆண்டில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இருப்பது போல் 20 ஆண்டாக குறைக்க வேண்டும். மாநில அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதிய பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்.
அனைத்து ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, நிதி உதவி தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படவேண்டும். தமிழகத்தில் சுயநிதி பள்ளிகள் உள்பட அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். பள்ளி கல்வி துறையில் முன் எப்போதும் இல்லாத வகையில் மாணவர்கள் ஆசிரியர்கள் நலன் கருதி புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திய அமைச்சர் செங்கோட்டையனுக்கு பாராட்டு தெரிவிப்பது.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநாட்டு இணை செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story