ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள நந்தியம்பாக்கத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ரவி(வயது35) தொழில்போட்டி காரணமாக கடந்த மார்ச் மாதம் கொலை செய்யப்பட்டார்.
திருவள்ளூர்,
இந்த கொலை தொடர்பாக அதேபகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நாகராஜ்(30), அவரது நண்பர் டில்லிபாபு(38) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நாகராஜ், டில்லிபாபு ஆகியோர் புழல் ஜெயிலில் உள்ளனர்.
இதற்கிடையே குற்றச்செயலில் ஈடுபட்ட நாகராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்கரவர்த்தி மாவட்ட கலெக்டருக்கு சிபாரிசு செய்தார். அதைத்தொடர்ந்து கலெக்டர் சுந்தரவல்லி அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story