வாரச்சந்தைக்கு அனுமதி மறுப்பு கொட்டும் மழையில் காய்கறி வியாபாரிகள் போராட்டம்


வாரச்சந்தைக்கு அனுமதி மறுப்பு கொட்டும் மழையில் காய்கறி வியாபாரிகள் போராட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2017 4:00 AM IST (Updated: 17 Jun 2017 1:27 AM IST)
t-max-icont-min-icon

வாரச்சந்தைக்கு அனுமதி மறுப்பு கொட்டும் மழையில் காய்கறி வியாபாரிகள் போராட்டம்

மதுரை,

மதுரை காளவாசல் பை–பாஸ் சாலையில் கடந்த பல ஆண்டுகளாக வெள்ளிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. போக்குவரத்து நெரிசலை காரணம்கூறி இந்த சந்தைக்கு மாநகராட்சி சமீபத்தில் அனுமதி மறுத்தது. ஆனால் அனுமதி வழங்கக்கோரி காய்கறி வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில், நேற்று சந்தைக்கு கொண்டு வரப்பட்ட காய்கறிகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதைதொடர்ந்து பறிமுதல் செய்த காய்கறிகளை திருப்பி தரக்கோரியும், காய்கறி சந்தை நடத்த அனுமதிக்க வழங்கக்கோரியும் காய்கறி வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் சாலை மறியல் செய்வதற்காக கோரிப்பாளையம் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்கள் போராட்டம் நடத்தியபோது திடீரென மழை பெய்தது. அப்போது கொட்டும் மழையில் நனைந்தபடி அவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர்.


Next Story