சேலம் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து வெள்ளிப்பட்டறை அதிபர் காயம்


சேலம் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து வெள்ளிப்பட்டறை அதிபர் காயம்
x
தினத்தந்தி 24 Jun 2017 10:45 PM GMT (Updated: 2017-06-25T02:58:09+05:30)

சேலம் அன்னதானப்பட்டி மணியனூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 29). வெள்ளிப்பட்டறை அதிபரான இவர், நேற்று காலை சொந்த வேலையின் காரணமாக தனக்கு சொந்தமான காரில் வீட்டில் இருந்து சீலநாயக்கன்பட்டி வழியாக அயோத்தியாபட்டணம் நோக்கி சென்றார்.

சேலம்,

சேலம் அன்னதானப்பட்டி மணியனூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 29). வெள்ளிப்பட்டறை அதிபரான இவர், நேற்று காலை சொந்த வேலையின் காரணமாக தனக்கு சொந்தமான காரில் வீட்டில் இருந்து சீலநாயக்கன்பட்டி வழியாக அயோத்தியாபட்டணம் நோக்கி சென்றார். வழியில் மாசிநாயக்கன்பட்டி அருகே கார் சென்றபோது, முன்னாள் சென்ற மற்றொரு காரை தமிழ்ச்செல்வன் முந்த முயன்றதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அயோத்தியாபட்டணத்தில் இருந்து சேலம் நோக்கி ஒரு லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த லாரி மீது மோதாமல் இருக்க, காரை சாலையோரம் திருப்பினார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் தமிழ்ச்செல்வன் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், காருக்குள் சிக்கிக்கொண்ட அவரை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story