கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற இளைஞர் காங்கிரசார் மீது போலீஸ் தடியடி


கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற இளைஞர் காங்கிரசார் மீது போலீஸ் தடியடி
x
தினத்தந்தி 8 July 2017 10:30 PM GMT (Updated: 2017-07-09T02:59:02+05:30)

புதுவையில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்ததையொட்டி இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா தலைமையில் அண்ணா சிலை அருகே காங்கிரசார் கூடினார்கள்.

புதுச்சேரி,

புதுவையில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்ததையொட்டி இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா தலைமையில் அண்ணா சிலை அருகே காங்கிரசார் கூடினார்கள். அங்கிருந்து நகரப் பகுதிக்குள் மத்திய அரசுக்கும், கவர்னர் கிரண்பெடிக்கும் எதிராக கோ‌ஷங்களை எழுப்பியபடி மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.

திடீரென அவர்கள் கவர்னர் மாளிகை நோக்கி வந்தனர். புதுவை தலைமை தபால் நிலைய பகுதிக்கு வந்தபோது அவர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அதை தள்ளிவிட்டு இளைஞர் காங்கிரசார் கவர்னர் மாளிகை நோக்கி முன்னேறினர். கவர்னர் மாளிகை அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் அவர்களால் முன்னேற முடியவில்லை. இருந்தபோதிலும் தடுப்புகளை தள்ளி விட்டு கவர்னர் மாளிகை நோக்கி சிலர் ஓட முயன்றனர். இதை தடுத்த போது போலீசாருக்கும், இளைஞர் காங்கிரசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. தொடர்ந்து போலீசாரையும் மீறி இளைஞர் காங்கிரசார் செல்ல முயன்றதால் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தப்பட்டது. உடனே அவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.


Next Story