தூத்துக்குடி மாநகராட்சியில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சினால் அபராதம்

தூத்துக்குடி மாநகராட்சியில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சினால் அபராதம்
x
தினத்தந்தி 15 July 2017 2:00 AM IST (Updated: 14 July 2017 7:37 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சியில் சட்ட விரோதமாக மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சினால் அபராதம் விதிக்கப்படும், என ஆணையர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சியில் சட்ட விரோதமாக மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சினால் அபராதம் விதிக்கப்படும், என ஆணையர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

குடிநீர்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல வீடுகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சப்படுவதாக தெரியவருகிறது. அப்படி மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதால், அந்த பகுதியில் உள்ள பலருக்கு குடிநீர் கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே பொதுமக்கள் சட்ட விரோதமாக மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை தவிர்க்க வேண்டும்.

அபராதம்

இல்லை என்றால் குடிநீர் உறிஞ்சும் வீடுகளில், மாநகராட்சி நிர்வாகம் மூலம் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும். அதோடு குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். மேலும் மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ரூ.10 ஆயிரம் வரை அபராத தொகை வசூலிக்கப்படும்.

எனவே மாநகராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகம் செய்யும் பொருட்டு, மாநகர பொதுமக்கள் மின் மோட்டார் மூலம் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சுவதை தவிர்த்து, மாநகராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.

Next Story