திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களை தடுக்க ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது அவசியம்


திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களை தடுக்க ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது அவசியம்
x
தினத்தந்தி 23 July 2017 2:30 AM IST (Updated: 23 July 2017 1:34 AM IST)
t-max-icont-min-icon

திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களை தடுக்க ரகசிய கண்காணிப்பு கேமராக்களை அமைப்பது அவசியம் என்று கர்நாடக மாநில மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ஹரிசேகரன் கூறினார்.

சிக்கமகளூரு,

திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களை தடுக்க ரகசிய கண்காணிப்பு கேமராக்களை அமைப்பது அவசியம் என்று கர்நாடக மாநில மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ஹரிசேகரன் கூறினார்.

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புராவுக்கு நேற்று முன்தினம் கர்நாடக மாநில மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ஹரிசேகரன் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ரகசிய கண்காணிப்பு கேமராக்கள்

சிக்கமகளூரு மாவட்டத்திற்கு உட்பட்ட கொப்பா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் திருட்டு, கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இதை தடுக்க அந்தப்பகுதிகளில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது அவசியம். இதற்காக மாவட்ட மற்றும் பஞ்சாயத்து நிர்வாகங்கள் உதவ வேண்டும்.

இதுமட்டுமல்லாமல் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்காகவும் போலீசாருக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி சிக்கமகளூரு டவுன் ராமனஹள்ளியில் உள்ள போலீஸ் பயிற்சி வளாகத்தில் நடக்கிறது.

நிலுவையில் உள்ள வழக்குகளை...

சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் நன்றாக பணியாற்றி வருகிறார்கள். 10 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து முடிக்க தனிப்படைகள் அமைக்கப்படும். இதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு போலீஸ் நிலையத்தில் இருந்தும் கோர்ட்டு பணிகளுக்காக சென்று வரும் போலீசாருக்கு பயணப்படி ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது.

சிக்கமகளூரு மாவட்டத்தில் மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் போலீசார் மட்டுமல்லாமல் அனைத்து துறையினரும் கலால் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story