காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம்: ரெயில் முன்பாய்ந்து போலீஸ்காரர் தற்கொலை
காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் ஆனதால் மனம் உடைந்த போலீஸ்காரர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை
சிவமொக்கா,
காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் ஆனதால் மனம் உடைந்த போலீஸ்காரர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராணிபென்னூரில் நடந்து உள்ளது.
போலீஸ்காரர்ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் டவுனை சேர்ந்தவர் மாருதி பார்கி(வயது 25). இவர் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மாருதி பார்கிக்கும், ராணிபென்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது, இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. ஆனால் மாருதி பார்கியும், அந்த கல்லூரி மாணவியும் வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருமணம் நிச்சயம்மேலும் மாருதி பார்கி காதலித்து வந்த கல்லூரி மாணவிக்கு, அவரின் பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இந்த நிலையில் அந்த கல்லூரி மாணவிக்கும், ராணிபென்னூர் டவுனை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
தனது காதலிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால் மாருதி பார்கி மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தாவணகெரேயில் நடந்த போலீஸ் தேர்வுக்கு பாதுகாப்பு பணிக்கு மாருதி பார்கி சென்று இருந்தார். பாதுகாப்பு பணி முடிந்ததும் மாருதி பார்கி, தனது சொந்த ஊரான ராணிபென்னூருக்கு சென்றார்.
ரெயில் முன்பாய்ந்து தற்கொலைகாதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் ஆனதால் மனவருத்தத்தில் இருந்து வந்த, மாருதி பார்கி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு ராணிபென்னூர் ரெயில் நிலையத்திற்கு மாருதி பார்கி சென்றார். அப்போது ரெயில் நிலையத்திற்குள் வந்து கொண்டு இருந்த ரெயில் முன்பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராணிபென்னூர் ரெயில்வே போலீசார் மாருதி பார்கியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் ஆனதால், மாருதி பார்கி ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இன்ஸ்பெக்டர் நேரில் ஆறுதல்இதையடுத்து அவரின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ராணிபென்னூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாருதி பார்கி தற்கொலை செய்து கொண்டது குறித்து அறிந்த தீர்த்தஹள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ராணிபென்னூருக்கு சென்று, மாருதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.