வேலூரில் கைதான மாநகராட்சி கமி‌ஷனர் வீடு, அலுவலகத்தில் ரூ.15½ லட்சம் நகை– பணம் சிக்கியது


வேலூரில் கைதான மாநகராட்சி கமி‌ஷனர் வீடு, அலுவலகத்தில் ரூ.15½ லட்சம் நகை– பணம் சிக்கியது
x
தினத்தந்தி 10 Aug 2017 4:18 AM IST (Updated: 10 Aug 2017 4:18 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாநகராட்சி கமி‌ஷன‌ஷரின் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.15½ லட்சம் மதிப்புள்ள நகை, பணம் சிக்கியது.

வேலூர்,

ஒப்பந்ததாரரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைதுசெய்யப்பட்ட வேலூர் மாநகராட்சி கமி‌ஷன‌ஷரின் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.15½ லட்சம் மதிப்புள்ள நகை, பணம் சிக்கியது.

லஞ்சப்புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று வேலூர் மாநகராட்சி கமி‌ஷனர் கமி‌ஷனர் குமாரை, அவர் ஒப்பந்ததாரரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து அவருடைய அலுவலகம், கிருஷ்ணாநகரில் உள்ள வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. முன்னதாக கமி‌ஷனர் அலுவலகத்தில் அவரது அறையில் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் இருந்தது. அதற்கு சரியான ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை போலீசார் கைப்பற்றினர்.

அதேபோன்று அவருடை வீட்டில் நடத்திய சோதனையில் 9 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கப்பணம், 26 பவுன் நகைகள் மற்றும் பணம் எண்ணும் எந்திரம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.15 லட்சத்து 64 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட கமி‌ஷனர் குமார் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தந்தை வழியில் மகன்

வேலப்பாடியை சேர்ந்த ஒப்பந்ததாரர் பாலாஜி லஞ்ச வழக்கில் மாநகராட்சி கமி‌ஷனர் குமாரை சிக்க வைத்தார். பாலாஜியின் தந்தை தங்கராஜ். இவரும் இதேபோன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி உதவிபொறியாளர் தியாகராஜன் என்பவர் லஞ்சம் கேட்டதாக போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார், உதவி பொறியாளர் தியாகராஜனை கைது செய்தனர். தற்போது தந்தையின் வழியில் ஒப்பந்ததாரர் பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் கமி‌ஷனர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story