ஜந்தகல் கனிம சுரங்க முறைகேடு வழக்கில் குமாரசாமிக்கு நிபந்தனை முன்ஜாமீன்
ஜந்தகல் கனிம சுரங்க முறைகேடு வழக்கில் குமாரசாமிக்கு கர்நாடக ஐகோர்ட்டு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
அப்போது கடந்த 2007–ம் ஆண்டு கர்நாடக முதல்–மந்திரியாக இருந்த குமாரசாமி தான், ஜந்தகல் கனிம சுரங்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை சட்டவிரோதமாக நீட்டிக்க சொன்னதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி கங்காராம் படேரியா போலீசாரிடம் கூறினார். இதையடுத்து, ஜந்தகல் கனிம சுரங்க நிறுவன முறைகேடு வழக்கு தொடர்பாக குமாரசாமி மீதும் சிறப்பு விசாரணை குழுவினர் வழக்குப்பதிவு செய்தார்கள். இதுதொடர்பாக ஏற்கனவே அவர் போலீசார் முன்பு விசாரணைக்கு நேரில் ஆஜராகி இருந்தார்.
இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க கோர்ட்டில் குமாரசாமி இடைக்கால முன்ஜாமீன் வாங்கி இருந்தார். இந்த இடைக்கால முன்ஜாமீன் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால் கர்நாடக ஐகோர்ட்டில் குமாரசாமி சார்பில் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்று ஐகோர்ட்டு நீதிபதி ரத்னகலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது ஜந்தகல் கனிம சுரங்க முறைகேடு வழக்கில் குமாரசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி ரத்னகலா உத்தரவு பிறப்பித்தார். அதாவது ரூ.5 லட்சத்திற்கான பிணையத்தொகையும், போலீஸ் விசாரணைக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஆஜராக வேண்டும் என்றும், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறி இருந்தார். இந்த வழக்கில் குமாரசாமிக்கு நிபந்தனை முன்ஜாமீன் கிடைத்திருப்பதால், அவருக்கு நெருக்கடி குறைந்துள்ளது.