ரெயில் மீது ஏறி ‘செல்பி’ எடுக்க முயன்ற வாலிபரை மின்சாரம் தாக்கியது


ரெயில் மீது ஏறி ‘செல்பி’ எடுக்க முயன்ற வாலிபரை மின்சாரம் தாக்கியது
x
தினத்தந்தி 12 Aug 2017 3:32 AM IST (Updated: 12 Aug 2017 3:31 AM IST)
t-max-icont-min-icon

தானே மாவட்டம் அம்பர்நாத்– பத்லாப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பெட்ரோல் கொண்டு செல்லும் சரக்கு ரெயில் நின்று கொண்டிருந்தது.

அம்பர்நாத்,

தானே மாவட்டம் அம்பர்நாத்– பத்லாப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பெட்ரோல் கொண்டு செல்லும் சரக்கு ரெயில் நின்று கொண்டிருந்தது. இந்த ரெயில் பெட்டி அருகே நேற்று மாலை 3 மணி அளவில் அப்பகுதியை சேர்ந்த அனிகேத் (வயது17) என்ற வாலிபர் நண்பர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது சரக்கு பெட்டியின் மீது நின்று ‘செல்பி’ எடுக்க அனிகேத் விரும்பினார். இதனையடுத்து அவர் சரக்கு ரெயில் பெட்டியின் மீது ஏறி செல்போனில் ‘செல்பி’ எடுக்க முயன்றார். அப்போது உயர்மின் அழுத்த கம்பியில் அவரது கை உரசியதால் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அனிகேத்தை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மும்பை கே.இ.எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அனிகேத் 70 சதவீத தீக்காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story