போலீஸ். டி.ஜி.பி.யிடம், ஓம்சக்தி சேகர் மனு எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற கோரி


போலீஸ். டி.ஜி.பி.யிடம், ஓம்சக்தி சேகர் மனு எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற கோரி
x
தினத்தந்தி 25 Aug 2017 11:24 PM GMT (Updated: 2017-08-26T04:53:59+05:30)

தமிழக துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஓம்சக்தி சேகர் நேற்று காலை போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதமை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி,

தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் பிரிவு ஏற்பட்டது. தற்போது தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அணிகள் ஒன்று சேர்ந்தன. ஆனால் எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கடத்தி வரப்பட்டு சின்ன வீராம்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழக அரசை கலைக்கும் சதிச்செயலில் ஈடுபடுவதாக தெரிகிறது. இதனால் புதுச்சேரியில் சட்டம்–ஒழுங்கு சீர்கெடும். எனவே அவர்களை புதுச்சேரியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தேன்.

இந்தநிலையில் அந்த சொகுசு விடுதியில் இருந்து புதுவையில் உள்ள ஓட்டலுக்கு எம்.எல்.ஏ.க்கள் வந்து தங்கி உள்ளனர். இவர்களால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் புதுச்சேரியில் இருந்து வெளியேறும்படி தமிழக எம்.எல்.ஏ.க்களிடம் கூற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story