3 வயது சிறுமியை கற்பழித்த வாலிபர் கைது


3 வயது சிறுமியை கற்பழித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2017 9:48 PM GMT (Updated: 2017-08-27T03:17:58+05:30)

மும்பை செம்பூரை சேர்ந்த 3 வயது சிறுமி, சம்பவத்தன்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாள்.

மும்பை,

மும்பை செம்பூரை சேர்ந்த 3 வயது சிறுமி, சம்பவத்தன்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது சிறுமிக்கு அறிமுகமான சச்சின் தேவ்கட்டே (வயது25) என்பவர் சாக்லேட் மற்றும் விளையாட்டு பொருட்கள் தருவதாக கூறி சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். பின் வெகுநேரம் கழித்து வீட்டிற்கு வந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தனர்.

அப்போது அச்சிறுமி சச்சின் தேவ்கட்டே தன்னை அழைத்து சென்றதாகவும், தகாத முறையில் நடந்ததாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்திய பரிசோதனையில் சிறுமி கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சச்சின் தேவ்கட்டேவை கைது செய்தனர்.


Next Story